வெள்ளி, 22 டிசம்பர், 2017

விவாக தர்மம்

இந்து தர்மத்தில் இருந்த அதி உத்தமமான விஷயம் பால்ய விவாகம்.

தர்மத்தை அழிக்கவே வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி குழந்தை திருமணம் சமூகக் கொடூரம் என்று சொல்லிவிட்டு இன்று கோ எஜூகேஷன் - செக்ஸ் கல்வி பற்றி பேசி மேல் நாட்டுக் கலாசாரம் என்று புதிது புதிதாக பினாத்துதல் செய்து சிறுமிகளை பாலியல் வன்புணர்வில் இந்தியன் சீரழிக்கிறான்.

8 வயது பெண் கெளரீ
9 வயதில் ரோஹிணீ
10 வயதில் கன்யா
அதன் பின் ரஜஸ்வலை .... எட்டு முதல் 10 வயதுக்குள் விவாகம் முடிக்கப்பட வேண்டும்

கெளரீ விவாகம் ஸ்வர்க்க லோகத்தை - ரோஹிணீ விவாகம் ப்ரம்ம லோகத்தை தரவல்லது.



பால்ய விவாகம் கணவன் மனைவிக்கு பரஸ்பர அண்யோன்யத்தை தரவல்லது -

இப்போதெல்லாம் 25 -28வயது வரை பெண்கள் சம்பாதிக்கிறேன் என்று சொல்லி பணத்தோடு தனக்கென விருப்பு வெறுப்பு பிடிவாதத்தையும் சேர்த்துக் கொண்டு அடங்காத மனைவியாய் ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி வழக்காடு மன்றத்தில்.

கணவனின் 32 வது வயதுக்குள் பிள்ளைகளை பெற்றுக் கொண்டு விடுதல் கட்டாயம். அப்போது தான் மகனோ / மகளோ பெற்ற தகப்பன் தன் கடமைகளை தன் சம்பாதித்து திடகாத்திரமாய் இருக்கும் காலத்திலேயே முடித்து விட முடியும் (58 வயது ரிடையர்மெண்ட்டுக்கு முன்).

ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்யாசம் தேவை - ஆணுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது - ஆக ஆணின் இச்சை பூர்த்திக்காக பெண் இளமையைப் பேணித்தான் ஆகவேண்டும்.

பெண்ணோடு உறவு கொள்வதில் சொல்லப்படும் முக்கிய விதி - தலை முடி நரைத்த பெண்ணோடு உறவு தவிர்க்க வேண்டும். ஆணால் இன்று நாகரீக பெண்களின் முதல் நிபந்தனையே வயது வித்யாசம் அதிகபட்சம் 2 வருடங்களே.

பெண் குழந்தைகளுக்கு இரண்டு ஜாதகங்கள் உண்டு. ஒன்று ஜனன கால ஜாதகம் - இன்னும் ஒன்று ருது மங்கள ஜாதகம். ஆனால் ஆண்களுக்கு ஒரே ஜாதகம் மட்டுமே.

பெண்ணுக்கு பருவமடைவதற்க்கு முன்பே திருமணம் செய்து வைத்து பின் ருது மங்கள ஜாதகத்தின் படி தக்க நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைப்பதாலேயே - இத்தனை விசேஷமாக தர்மம் நமக்கு குறிப்பிட்டு சொல்லி கொடுத்தது.

ஆனால் .....ஹூம்...⁠⁠

எழுதியவர் :- சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

வெள்ளி, 8 டிசம்பர், 2017

கண்ணனின் வஸ்திராபகரணம்

கண்ணனின் ஸ்நேகிதன் பாலகோபன் எப்போதுமே கண்ணனிடம் மிகவும் நெருக்கம் காட்டியவன்....

டேய், கண்ணா.... நீயோ சிறுவன்... நீ எதுக்குடா, கோபிகை களின் வஸ்திரங்களை அபகரிக்கிறாய்?!

பாலகோபா, வஸ்திர அபகரன லீலையில் நீ உடலின் நிர்வாணத்தை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளாய்...

எனக்கு உடல் தெரியாது.... ஆத்மாவே தெரிகிறது.... ஆத்மா ப்ரஹ்மத்தின் சொரூபம்.... நிர்வாணம் தான் மோக்ஷ சாதனம் என்பதை கோபிகைகளுக்கு உணர்த்தும் கிரியை தான் வஸ்திர அபகரணம்.... இதில் உள்ள லவ்கீக பலன்.... கோகுலத்து சிறுவர்கள் எல்லோரும் என் சர்வ வியாப ரூபங்களோடு விளையாடி வெண்ணெய் திருடி மகிழ்கிறார்கள்.... இங்கே கோபியர்கள் வஸ்திரத்தின் மீது பற்று உள்ளவரை லவ்கீக வெண்ணெய் திருட்டுக்கு தடையாக என்னையும் தம்மில் ஒருவராக பாவிக்கும் சிறுவர்களை உரியடிக்கு முடியாமல் தடுப்பார்கள்....

என் நண்பர்களின் சந்தோஷத்துக்காக, கோபிகைகள் வஸ்திரங்களை அபகரித்து அவர்களை கரை ஏற விடாமல் தடுக்கிறேன்...

வஸ்திரங்களை பற்றி கவலை படாத - நிர்வாணத்தை உணர்ந்த கோபிகைகள் வெண்ணெய் திருட்டை பற்றி கவலை படுவதில்லை... அவர்களை சம்சார சாகரத்தில் இருந்து கரை ஏற்றி விடுகிறேன்....

கண்ணனின் இந்த கருத்து பாலகோபனுக்கு புரிந்ததா என்பது தெரியாது.... ஆனால் நமக்கு புரிய வேண்டும்....

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

கண்ணன் காலில் தைத்த முள்

சத்யபாமாவுக்கு கண்ணன் மீது தனக்கு மட்டுமே அதிக பாசம் இருக்கிறது என்ற கர்வம் இருந்தது.

மாய கண்ணன், இந்த அகங்காரத்தை போக்க திரு உள்ளம் கொண்டு, ஒரு இரவு நேரத்தில், சத்யபாமா சற்று உலாவி வருவோம் வா! என்று அழைத்தான்.

இருவரும் நடந்து கொண்டு சுதாமன் வீட்டுக்கு அருகில் வந்து இருக்கும்போது கண்ணனின் வலது காலில் முள் ஒன்று தைத்து விட கண்ணன் அம்மா என்று கூவினான்.....

சத்யபாமா பதறிய படி, யாரங்கே, சீக்கிரம் வந்து பரமாத்மா காலில் தைத்த முள்ளை அகற்றி தீயிலிட்டு பொசுக்குங்கள் என்று கூச்சல் போட்டாள்......

தன் வீட்டு அருகே கண்ணன் குரல் கேட்ட சுதாமன் ஓடோடி வந்து கண்ணன் காலில் தைத்த முள்ளை அகற்றி அதை கண்களில் ஒற்றிய படி தன் வீட்டுக்குள் கொண்டு சென்று பன்னீரில் நனைத்து ஒரு சிறு தங்க பேழையில் வைத்து பூஜை மண்டபத்தில் வைத்து வணங்கி விட்டு வந்து கண்ணனை வரவேற்று உபசரிக்க வர சத்ய பாமா கடும் கோபம் கொண்டாள்.



சுதாமன், கண்ணா, ரொம்ப நன்றி. எனக்கு அனுக்கிரகம் செய்யவே இங்கே வந்து இருக்கே.

சத்யபாமா கோபம் கட்டுக்குள் அடங்காமல், சுதாமா, என்ன உளருகிறீர் என்றாள்....

கண்ணன், அமைதியாக இரு சத்யபாமா!

சுதாமா ... என் காலில் குத்தி என்னை வருத்திய முள்.... அதை நீ கொண்டு சென்று பூஜா கிருஹத்தில் வைத்து விட்டு ... என்னப்பா உன் செயல்?!

சுதாமன் சொன்னான்....

கண்ணா,

நீயே, பரம்பொருள்.

இந்த முள் குத்தும் சம்பவம் மூலம் நீ ஏதோ நாடகம் நடத்துகிறாய்.

சர்வமும் நீதான். அந்த முள்ளும் நீதான். அந்த முள் வைத்து நீ உன்னை கொண்டே உன்னை குத்திக் கொண்டு உள்ளாய்.

இது நாள் வரை அந்த முள் ஒரு காட்சி பேத வஸ்து....

இன்று அது உன் ரத்தத்தோடு சம்பந்தப்பட்டு நீயாக (பரம்பொருளாகவே) மாறிவிட்டது.

உண்மையில் சொல்லப்போனால், அந்த முள்ளை என் கண்ணுக்குள் குத்திக்கொண்டு உன்னை எனக்குள் ஒருவனாக ஆக்கிக் கொண்டு இருக்க வேண்டும்... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் உன்னை, வெளியில் காண முடியாமல் போய்விடும்... மேலும் கண்கள் குருடானால் உன் காயத்துக்கு யார் மருந்து போடுவார்கள்...

வீடு தேடி வந்த உன்னை உபசரிக்க வேண்டுமே!

நேற்று வரை அது ஜட வஸ்து... இன்று உன் ரத்த பந்து பிம்பம்....

சுதாமன் சொல்லிக்கொண்டே போக, சத்யபாமா தலை குனிந்து நின்றாள்....

கண்ணன் திருவருளால் அந்த பேழையில் இருந்த முள் ஒரு தங்கக் கண்ணன் உருவில் சுதாமன் பூஜை மண்டபத்தில் எழுந்தருள...

சுதாமன், ஏதேதோ விளங்கங்களை சொல்லிக்கொண்டு கண்ணனின் திருவடிகளை வருடி, ஏண்டா கண்ணா... ஒரு பாதரக்ஷை போட்டுண்டு வரமாட்டாயாடா? இப்படி அசடாட்டம் வெறும் காலோடு அதுவும் ஆத்துக்காரியை கூட்டிண்டு, இருட்டில்.... எங்கே போனான் உன் தேரோட்டி... என்று தொடர்ந்து புலம்ப....


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூலில்

திருப்பராய்த்துறை ஆலயம்

சிவாலயங்களில் அமைப்பு நேர்த்தி மூலவரின் நோக்கு திசையை அனுசரித்து.... தென் மேற்கு மூலையில் கணபதி துவங்கி, அநேகமாக அனைத்து கோவில்களும் ஒரே மாதிரியாகவே இருக்கும்...

மூலவரின் (கருவறை) வலது (தென்) கோஷ்டம் தக்ஷிணா மூர்த்தி...

பின் புறம் மேற்கு கோஷ்டம் லிங்கோத்பவர்,

இடது (வடக்கு) கோஷ்டம் பிரம்மா....

திருச்சி கரூர் சாலையில் திருப்பராய் துறை ஆலயத்தில் மூலவர் பின் (மேற்கு) கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் இங்கே அர்த்தநாரி



இங்கு மட்டுமல்ல, அநேகமாக திருச்சி மாவட்ட சுற்று வட்டார அனைத்து சிவ ஆலயங்களிலும், லிங்கோத்பவருக்கு பதில் ஆணாகி பெண்ணாகி நின்றான் அவன்!



குறிப்பாக, விவாக தாமதங்கள், தடைகளை நீக்க, இங்கே வந்து பலரும் பரிகார பூஜை செய்வது பிரசித்தமான ஒன்று....


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் முகநூலில்

புதன், 29 நவம்பர், 2017

குலதெய்வங்கள்



நண்பர்களுக்கு வணக்கம். குல தெய்வம்! இங்கே நாம் பேச நினைப்பது நம் வம்சத்துக்கே நல்ல ஒரு விழிப்புணர்வை கொடுக்கும். வழிகாட்டும்.

இங்கே நாம் பேசுவது ஏதோ சம்பந்தம் இல்லாமல் வெவ்வேறு பக்கங்களில் செல்லும்... ஆனாலும் எல்லாவற்றையும் ஒரே புள்ளியில் முடிச்சு போடுவோம்.



ஊருக்குள்ளே ஒரு போலிச் சாமியார், தினமும் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தார்....

அவரையும் நம்பி ஒரு பாமரன்... அவரிடம் உபதேசம் வேண்டி, தினமும் வந்து சாமியாரை வழிபட்டு காணிக்கை செலுத்தி வந்தான்...

பாமரன் தினமும் சாமியாரிடம் உபதேசம் வேண்டினான்.... ஒரு நாள் சாமியார் ஏளனமாக, *இங்கே_அங்கே*, இதுவே உனக்கான உபதேசம் என்றார்....

பாமரன் சுற்றம் அன்னம் பானம் மறந்து தன் ஆசாரியன் சொன்ன மகா வாக்கியத்தை ஜெபிக்க....

6 மாதங்கள் கடந்து குருவிடம் வந்தான்...

குருவே மந்திரம் பலித்து விட்டது என்று சொல்ல... குரு ஏளனமாக சிரிக்க.... அருகே இருந்த பிரம்மாண்டமான பாறையை நோக்கி பாமரன் இங்கே அங்கே என்று சொல்ல....

பாறை இங்கும் அங்குமாக நகர... அடுத்த நொடி குருவை நோக்கி அங்கே இங்கே என்று சொல்ல குரு தன் ஆசனத்தில் இருந்து சீடன் அருகில் பறந்து வர....

மேலே சொன்ன சம்பவத்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.... குரு போலி.... சீடன் மாயை... மந்திரம் வெறும் வெற்றுச் சொல்... ஆனால் அப்யாசம்/ பாமரன் பக்தி சிரத்தை உறுதியானது... பலித்தது....

குலதெய்வம் விஷயத்தில் நமக்கு வேண்டியது நம்பிக்கை/ சிரத்தை / உறுதி....





குலதெய்வ வழிபாடு என்பது இன்று, குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்டது...

தமிழ்நாட்டில் திராவிட போலிகள் நம்மை அடியோடு அழித்துவிட்டனர்...

ஜாதி வேண்டாம்.... சரி.... ஆனால் அது தமிழகத்தில் மட்டும்தானா!

ஆன்மீகம்/ தர்மம் செழிக்க ஜாதி தேவை...

புரியும் படியாக சொல்கிறேன்...

குருநானக்/ குரு கோவிந்த சிங் போன்ற மகான்களை / ஸ்தாபகர்களை பின் பற்றி வந்த சீக்கியர்கள்.... பிந்தரன்வாலே, குர்மீத் சிங் போன்றவர்களை பின் பற்ற விளைவுகளை நேரில் கண்டோம்...

குலதெய்வ வழிப்பாட்டை மறந்து தனி மனித வழிப்பாட்டில் இறங்கி இன்று கட்சி ஜாதி சங்கம் என்று ஆளுக்கு ஒரு நீதி மூலைய்க்கு ஒரு பிரிவாக நிற்கிறோம்....

மீனவர்களுக்கு கடற்கரை தேவதைகள் / மச்ச அவதாரம் குல தெய்வமாக இருந்தவரை எல்லோரும் ஒன்று... ஆனால் இன்று, ஒவ்வொரு மீனவ குப்பத்துக்கும் ஒரு தலைவன்/ ராமேஸ்வரம் மீனவன் பாம்பனுக்குள் வரக்கூடாது....

கோனார் ஜாதியினருக்கு கிருஷ்ணன் குலதெய்வமாக இருந்தவரை ஒற்றுமை இருந்தது.... சாரங்கபாணி தலைவனாகி தேசத்தை கெடுத்து விட்டான்....

குரு என்பவர் நமக்கு பாதையை காட்டுபவர்... அவரே தெய்வமல்ல... இஸ்லாம் கிரித்தவத்தில் கடவுள் ஒன்றே.... அங்கங்கே சர்ச் பாதிரி மௌல்விகள் பின் தனித் தனி group கிடையாத வரை சரி...

கத்தோலிக்க/ பெந்தாகெஸ்த் - உள்ளூர் பாதிரி தலைமையில்.... இதுதான் பிரச்சனை...

இஸ்லாத்தில் கூட இதே கதை.... சன்னி ஷியா / பிரிவினைவாத குழுக்கள்....

ஹிந்து தர்மத்தில் .... சைவ/ வைணவ சண்டை.... ஆச்சாரியர்கள் பக்கம் பிரிந்து நிற்றல்...

கோவிலுக்கு போய் ஸ்வாமியை வழி படுவதை மறந்து பூசாரியை/ கோவிலுக்கு வழி சொன்னவன் பின்னால் அணி சேர்ந்து விட்டோம்....

வ உ சி, வாழ்க்கையின் பின்னாளில் ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டார்... அவரை அணுகிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகிகள் வ உ சி தங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டால், அவருக்கு தமிழக நிர்வாகி பொறுப்பும் ஜீவனத்துக்கு பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டினார்கள்....

வ உ சி சொன்னார்,

அய்யா, நான் சிறை சென்ற போது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் வழி அனுப்பினார்கள்... சிறைவாசம் / பிரிவு என்னை மக்கள் மனதில் இருந்தே துடைத்து எறிந்துவிட்டது...

நான் விடுதலை ஆன நாளில் என்னை வரவேற்க வந்தவர்கள் சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா, சங்கு சுப்ரமணியம்.

மேற்படி மூவருமே ப்ரம்மணர்கள்.... அந்த ப்ரம்மணர்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஜஸ்டிஸ் கட்சியோடு இணைந்து நான் அரசியல் செய்ய/ வயிறு வளர்க்க விரும்பவில்லை...

வஉசி க்கு தேசம் தெய்வமாக குலதெய்வமாக இருந்தது.... ஜஸ்டிஸ் கட்சி தொண்டர்களை போல அவருக்கு ஒரு பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு அயோக்கியன் தலைமையில் வஉசி இணைந்து இருந்தால்?!



வடநாட்டில் / கர்நாடகாவில் கூட ஜாதி வம்ச பெயர்களோடு கூடி இருப்பதால் .... குல தெய்வ வழிபாடு, தர்மத்தின் மீது நம்பிக்கை இன்றும் நிலைத்து இருக்கிறது....

லிங்காயத்/ கவுடா/ பட்/ஹெக்டே என்று... கர்நாடகாவில்... வடக்கே, குப்தா, யாதவ், சர்மா, திரிபாதி... இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு குலதெய்வத்தின் பின்னால் ஒருங்கிணைந்து நின்றவரை பிரச்சனைகள் இல்லை....

யாதவர்கள், முலாயம்/ லாலு என்று பிரிந்த போது?!

பிரகாஷ் சிங் பாதல் / சுர்ஜீத் சிங் பாதல் சீக்கியர்களாக இருந்தவரை பிரச்சனை இல்லை... தலைவர்கள் ஆன பின்?!

திக் விஜய் சிங், ராஜ்நாத் சிங் சரண் சிங், சிவராஜ் சிங் சர்தார்ஜி க்கள் அல்ல... ஆனால் ஏதோ ஒரு வம்சம்/ குல தெய்வத்தை நம்பியவரை மனிதர்கள்... தலைவர்கள் ஆன பின்?! அரசியல் வாதிகளாக...

பூசாரிகளை/ வழிகாட்டிகளை வழிபட்டு இலக்கை மறந்தோம் என்று சொல்லி இருந்தேன்...

இது ஏதோ இந்து சந்நியாசிகள் மடாதிபதிகளை எதிர்த்து பேசும் ஒரு திரித்து விடும் செயல் என்று யோசிக்க வைக்கிறதா?!

ஆம், நான் சிருங்கேரி/ காஞ்சி மடங்களிடையே உள்ள துவேஷம் குறித்தே பேசுகிறேன்...

ஆதி சங்கரர் சொன்ன அத்வைத சித்தாந்தப் படி சாரதா/ காமாக்ஷி எல்லோரும் ஒன்றுதானே.... பரம் பொருள் ஒன்றே பலவல்ல... சத்தியம் ஒன்றே இரண்டல்ல....

ஹரி சிவன் என்ற வஸ்து இரண்டு என்பதில் என்ன பெருமை இருக்கிறது... இரண்டில் ஒன்று.... 99% 1% என்றால் கூட, முழுமை என்பது கேள்விக்குறி ஆகிவிடும்...

ஹரி சிவன் என்பது பாட பேதம்! அதே போல சாரதா/காமாக்ஷி என்பது காட்சி பேதம்...

மூலத்தை விட்டு விட்டு மடங்களை பின் பற்றி இங்கே யார் பெரியவர் என்று சண்டை இட்டுக்கொண்டு!!!

திருவண்ணாமலை....

இங்கே கிரி வல பாதையில் சேஷாத்திரி ஸ்வாமிகள்/ ரமணர்/ யோகிராம் சூரத் குமார் (கொஞ்சம் உள்ளே) என்ற 3 சாதுக்கள்/ யோகிகள் சமாதிகள் உள்ளது...

இந்த சமாதி கோவில்கள் உள்ளே வந்து போகும் மக்கள் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடு நமக்குள் இருக்கும் பேதத்தை நமக்கு நன்றாக புரிய வைக்கும்...

கிரித்தவன் அல்லது முஸ்லீம்.... ஏற்றுக்கொண்ட கொள்கை /தலைமை ரீதியாக மோதிக்கொண்டாலும் கடவுள் என்று வரும்போது ஜீஸஸ்/ அல்லா மட்டுமே!

ஹிந்து தர்மத்தில் பிரம்மம் ஒன்றே...அதுவே புரித்தலுக்காக பேதங்களோடு ஆணாகி பெண்ணாகி அலியாகி நின்றது... ஆனால் அப்படி பரம் பொருள் அல்லது பிரிந்து நின்ற பிரம்மத்தை குலதெய்வம் என்று பின் பற்றி வாழ்வதை மறந்து தனி மனிதன் பின்னால் / பூசாரிகள் பின்/ வழிகாட்டிகள் பின்னர் போக தொடங்கி விட்டோமே!



குலதெய்வமோ/ குரு வழிபாடோ / சிவா விஷ்ணுவோ... இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூக்ஷமம் ஒன்று இருக்கிறது....

இதை சுலபமாக புரிந்து கொள்ள / அத்வைதத்தை சுலபமாக புரிந்து கொள்ள.... சில சம்பவங்களை பற்றி பேசுவோம்....

உண்டென்றிரு தெய்வம் ஒன்றென்றிரு

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

யாதொரு தெய்வம் கொண்டீர் அங்கே அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவார்

சர்வம் விஷ்ணு மயம் ஜகத்

அறுவகை சமயம் வைத்தார்....

மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ....

சகலமும் ஒன்று என்று புரியும். நாம்தான் பேதம் பார்க்கிறோம் என்பது நமக்கு புரியும்.

அஷ்ட வக்கிர மகரிஷி ஒரு நாள் ஜனகன் சபைக்கு, ஜனகன் வேண்டுகோளின் பேரில் ஒரு விவாதத்துக்காக/ சபை அறிஞர்களிடம் இருந்த ஞான விசாரங்களை தீர்த்து வைக்க வந்தார்...

அவர் உடல் 8 கோணலாக இருந்ததால் அஷ்ட வக்கிரர் என்று பெயர்....

ஜனகன் சபைக்குள் கை கால் மாற்றி உடலை வித விதமாக கோணித்து அஷ்ட வக்கிரர் உள்ளே வர ஜனகன் எழுந்து ஓடி வந்து வரவேற்க, சபை பெரியவர்கள் அஷ்ட வக்கிரர் உடல் கோணல் நடையை பார்த்து ஏளனமாக சிரித்தார்கள்....

உடனே, அஷ்ட வக்கிரர் ஜனகனை ஆசீர்வதித்து விட்டு, பொறுமையாக சொன்னார்....

ஜனக மன்னனே, நான் வந்த வேலை முடிந்தது... உன்னையும் ஆசீர்வதித்தேன்.... நான் ஏதோ கற்றறிந்த சான்றோர்கள் சபையில் உரையாட எண்ணி இங்கே வந்தேன்.... இங்கே வந்த பிறகே புரிந்தது...இங்கே கூடி இருப்பவர்கள் செருப்பு தைப்பவர்கள் என்று.... இவர்கள் தோலால் ஆன என் உடலை மட்டுமே காண்கிறார்கள்.... இவர்களோடு உரையாட நான் விரும்பவில்லை என்று சொன்னார்....

மனிதன்/ தெய்வம்/ காட்சி வேறு வேறு.... ஆனால் உள்ளே இருக்கும் உயிர் / வஸ்து/ ஆத்மா ஒன்றே...

கடலை மாவு நெய் இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் கூட வேறு வேறு பெயரில் லட்டு/ மைசூர் பாகு என்று மாறுபடும்... ஆனால் அதன் சுவை தன்மை ஒன்றே.... அது போலவே குலதெய்வம்/ குரு எல்லோரும் ஒருவரே...

தன்மையை நாடிச் செல்வதை விட்டு விட்டு தனி மனிதன் பின் தேடிச் சென்று நாம் தனிமைப் பட்டுவிட்டோம்....



முன்பே சொன்னேன்.... எங்கெங்கோ சுற்றுவோம்... ஆனால் முடிச்சு போடுவோம் என்று.... இதுவரை தெய்வம் ஒன்றுதான்.... நம் குலதெய்வம் என்பது காட்சி பேதம் என்று!

இந்த தொடரில் நாம் இழந்து விட்ட பல பொக்கிஷங்களை குறித்து பேச / எழுத/ சிந்திக்க சீர் செய்ய நிறைய உள்ளது....



திரிவேணி கிரியின் இயற்ப் பெயர் நினைவில் இல்லை....

இவர், ரமண மகரிஷியிடம் முமுக்ஷு வாக இருந்தார்.... ஒருநாள், ரமணர் திரிவேணி கிரி யிடம், நீ உடனே திருக்கோவிலூர் ஞானானந்தரிடம் செல்... உனக்கு அங்குதான் தீக்ஷை கிடைக்கும் என்றார்...

திரிவேணி கிரி மிகுந்த சஞ்சலம் அடைந்து, புது குரு நாதர் எப்படி இருப்பாரோ என்று ஐயம் அடைய....

ரமணர் சொன்னார்....

அஹம் ப்ரம்மாஸ்மி என்பது மகா வாக்கியம்.... அதாவது நானே பிரம்மம்.... ஆனால் நீயோ, ரமணன் வேறு, ஞானனந்தர் வேறு என்று பேதம் பார்க்கிறாய்... இந்த நிலை நீடித்தால் ஞானம் எப்படி கை வரப்பெரும்?!

இதே போலத்தான், பிரெஞ்ச் Paul Frenden... ரமணர் மூலம் காஞ்சி பரமாச்சாரியாரிடம் சரணாகதி அடைந்தவர்...

எப்படி குருவுக்கு பேதம் இல்லையோ, அப்படியே கடவுளுக்கும் பேதம் இல்லை.... இது புரிந்தால் மட்டுமே தர்மம் தழைக்கும்....

குலதெய்வத்துக்கு இத்தனை பீடிகையா?!

ஆம், தேவைதான்...

இன்று globalisation உலகில் .... நாம் இழந்தது குலதெய்வ வழிபாடு.... குலதெய்வம் என்பது நம் மண் /ரத்தத்துடன் கலந்து....

இன்று பல குடும்பத்தினர்களுக்கு குலதெய்வம் தெரியாது/ கோத்திரம் தெரியாது குடும்ப பெயர் தெரியாது....

இந்த தொடரில் ஸ்வீகாரம் குறித்தும் பின்னால் பேசுவோம்...

கசப்பான மருந்தை தேன் கலந்து சாப்பிடுவதை போல ... சம்பவம் / கதைகள் நடுவே தத்துவத்தை தேடுவோம்....

தேடுதலை, எங்கோ ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த நிலைக்கு செல்வதே பரம பதம் செல்ல வழி...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.... ஆம், க்ஷத்ரியன் ஆயுதங்களை நம்பி ஜெயித்தால், பிராம்மணன் தர்ப்பை புல்லையே ஆயுதம் ஆக்கிக் கொண்டான்..

ஊர் விட்டு ஊர் வந்து சொந்தம்/ மண்ணின் தொடர்பை இழந்து விட்டோம்.... இனி, தேடிக்கொண்டே சொச்ச காலத்தையும் கழித்து விடாமல், புதியதோர் விதி செய்வோம்....

வம்ச வழி பட்டியலை இனியாவது தயாரிப்போம்.... அந்த பட்டியலில் கோத்திரம்/ குடும்ப - வீட்டுப் பெயர்/ குலதெய்வம் போன்ற குறிப்புகளை நம் அடுத்த தலை முறைக்கு/ சந்ததிகளுக்கு விட்டுச்சென்ற புண்ணியம் செய்வோம்....

ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு என்ற தேடுதல் முலம் நம் ரத்தம் - சொந்தம் -மண் வாசனை பெறுவோம் / புதுப்பிப்போம்.



குல தெய்வம் என்பது கிராம தேவதைகள், வம்ச பெரியோர்கள், எல்லை/ காவல் தெய்வங்களே.

முன் காலங்களில் அரசர்கள் அவரவர்களுக்கு என்று சிவன் /விஷ்ணு கோவில்களை அமைத்து குலதெய்வ ஆராதனை என்று வழிபாடு நடத்தினர்...

குலதெய்வ வழிபாடு என்பது நான் அறிந்தவரை சமூக நல்லிணக்கம்....

மேல் மலையனூர்... இங்கே பூசாரிகள்!?!?!

1000 கணக்கான உயர் ஜாதி மக்களின் குலதெய்வம் மேல் மலையனூர் அம்மன்....

என் சகலை குலதெய்வம், ரேணுகா தேவி, படவேடு....

ஜமதக்கினி - ரேணுகா - பரசுராமர் கதை... தேடிப் பிடித்து படித்தால் தெரியும்.... ரேணுகாதேவி படவேடு அம்மன் யார் என்று....

(நீங்கள் தேடிப் படிக்க வேண்டும் என்பதறகாகவே இங்கே கதையை தவிர்கிறேன்)

சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன்.... விட்டல் தியாகராஜன்.... பீரோ of இந்தியன் standard ப்ரமணன்... குலதெய்வம் உத்திரங்குடி அய்யனார்....

கிடா வெட்டி சாராயம் படைப்பு உண்டு.... நண்பர் காசு கொடுத்துவிட்டு வழிபாடு நடத்தி விட்டு விலகி வந்துவிடுவார்...

கிடா வெட்டு/ சாராயம் /சுருட்டு என்பது எல்லாம் பின் நாட்களில் பிழைப்பு ஆதாயம் தேடி படித்தவன் பாட்டை கெடுத்து எழுதியவன் ஏட்டை கெடுத்து வந்ததே..

ஒன்று நிச்சியம்....

குலதெய்வம் என்பது சாதாரண மனிதர்களுக்கு கிராம/எல்லை/ வம்ச பெரியவர்கள் மட்டுமே....

தோரண கணபதி....

சிருங்கேரி சாரதா பீட கருவறை நுழைவு வாயில் கணபதி நெல்லை பகுதியில் பல குடும்பங்களுக்கு குலதெய்வம்...

இல்லை என்று மறுக்க யாராவது உண்டா?



கிராமங்களில் கூட்டமாக வசித்த காலத்தில் குலதெய்வ பிரச்சனை இல்லை...

நகரங்களை நோக்கி மனிதன் நகர நகர உலகம் விரிய மனம் குறுகியது.

ஜானவாசம் / மாப்பிள்ளை அழைப்பு... எதற்காக?

லக்ன பத்திரிக்கை என்று பெண் பார்க்கும் சடங்கு முடிந்த பின்.... நடக்கும் நிச்சயதார்த்தம், ஒரு சம்பிரதாயம்.... ஆனால் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து அன்று இரவு நடக்கும் நிச்சயதார்த்த சடங்கில் பத்திரிக்கை படித்து நடக்கும்... அதுவே இருதியானானது....

மாப்பிள்ளை அழைப்பு என்பது, மாப்பிள்ளை குறித்த ஒரு கருத்து கேட்பு!

அக்கம் பக்கம் அண்டை ஊர்களில் மாப்பிள்ளை ஏதாவது தப்பு தண்டா செய்து இருந்தாலும், ஜானவாசத்தின் போது மாப்பிள்ளை யின் மீது புகார் சொன்னால் கூட கல்யாணத்தை நிறுத்தி விடலாம்....

ஆனால், இன்று!

மாப்பிள்ளை எங்கோ தூர தேசம்.... மக்கள் தொகை பெருக்கம்... அதனால், மாப்பிள்ளை அழைப்பே தேவை இல்லாத செலவீன சடங்கு...

அதற்கு பதிலாக, இப்பேது முதல் நாள் மாலை reception.... நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது...

Reception இல் பெரிய போட்டோ session நடக்கும். அன்று இரவு மாப்பிள்ளை அல்லது பெண் ஓடி போய்விட்டால்?!

தேவை இல்லாத சடங்குகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நாம் குறைத்துக் கொண்டு, குலதெய்வ வழிபாடு அது குறித்த ஆராய்ச்சி என செலவு செய்யலாமே...

நகர மயமாகி நரக மயமாகி குலதெய்வத்தை மறந்து விட்டோம்...

வேர்களை/ உறவுகளை பிறந்த மண்ணை இழந்துவிட்டோம்...

Nursery யில் செடி வாங்கி வீட்டில் வைப்போம்....அந்த செடியோடு கீழே கொஞ்சம் பிறந்த மண் எதற்காக கட்டி அனுப்புகிறார்கள்?!

குலம் ஆசாரம் தெய்வம் விட்டுப் போனதற்கு முக்கிய காரணம் ஸ்வீகாரம்.... குறிப்பாக, கிறித்தவ (பிரிட்டிஷ்) ஆட்சியில் வாரிசு பிரச்சனையில் ஜான்சி ராணியே அவஸ்தை பட்டாளே.... (வரலாறு படிப்போம்)



சுவீகாரம் என்பது வாரிசு வேண்டி உறவினர் குழந்தைகளை தத்து எடுப்பது....

சுவீகாரம் என்பது அக்னி பூர்வ சடங்காக நடந்தவரை தோஷம் இல்லாமல் இருந்தது....

வெள்ளையர் ஆட்சியில், வாரிசு இல்லாத சொத்துக்கள் அரசுடைமை ஆகும் என்று சட்டம் வர,

அக்னி / மந்திர பூர்வ சடங்கு காகிதமாக மாறி ... உயில் நடைமுறைக்கு வந்தது...

சுவீகாரம், எடுப்பது பாரம்பரியமாக ஒரே கோத்திரத்தில் மட்டும் நடக்கும்.... அதுவும் மந்திர பூர்வமாக / குலதெய்வ சாட்சியாக!

பின் நாட்களில் அரசு கெடுபிடி காரணமாக சுவீகாரம் என்பது rather became emotional...சொத்துக்காக / குடும்ப உறவுகள் அழுத்தம் கருதி and not not traditional.

பேப்பரில் எழுதிவிட்டால் போதுமா?

பண்டைய நாட்களில் கோத்திரம் விட்டு கோத்திரம் சுவீகாரம் எடுத்துக்கொண்டால் கூட, அக்னி பூர்வ சடங்கின் மூலம் ஒரு ரத்த சுத்தீகரிப்பு நடந்தது.... சுவீகார சடங்கு மந்திரங்களை இந்த திசையில் ஆராய வேண்டும்.... எனக்கு போதுமான ஞானம் இந்த விஷயத்தில் இல்லை.

பின் நாட்களில் கோத்திரம் விட்டு சுவீகரித்து, குலதெய்வ சாட்சி இல்லாமல் காகித சாட்சியால் ஏற்படும் சிக்கல் ஒன்றை பார்ப்போம்...

அதற்கு முன்.... கடந்த 2016 ஜூன் மாதம் எனது ஷட்டகரின் தாயார் இறந்து போனார்... அப்போது என் மைத்துனிக்கு பெண் வீட்டு சீர் நானே வைத்தேன்.... அப்போது வீட்டின் பெயர் சொல்லி ஓதி விட சொன்ன போது, அங்கே இருந்த புரோகிதர்.... வீட்டின் பெயரை கேட்ட உடனேயே கோத்திரம்/ குல தெய்வம் போன்ற விஷயங்களை சொன்னார்....

ஆனால், என் விஷயத்தில் அது பொருந்தவில்லை.... காரணம், என் தந்தை சுவீகாரம் எடுக்கப்பட்டவர்.... என் பாட்டி கணவனை இழந்த பின் தன் முனைப்பில்! (காகிதத்தில் - வளர்ந்து பெரியவர் ஆன பின்)

ADDED to... என் தகப்பனாரின் நேரடி ரத்தத் தந்தையும் சுவீகாரம் வந்தவர்...



குலதெய்வம் என்று துவங்கி, கோத்திரம் - ஜானவாசம் - சமூக நல்லிணக்கம் - சுவீகாரம் என்று பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.....



இனி,

கோத்திரம் விட்டு கோத்திரம் ஸ்வீகரிப்பதால் குலதெய்வம் மாறியது கூட பிரச்சனை அல்ல.... ஆனால் அக்னி மந்திர பூர்வ சடங்கு அழிந்து போனதே பிரச்சனை...

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது கிடையாது...

ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் பாரத்வாஜ கோத்திரத்தில் இருந்து சுவீகாரம் பெறுகிறார்....

இப்போது, சுவீகாரம் வந்தவர் ஆத்ரேய கோத்திரமாக கருதப்படுவார்....

அடுத்த தலைமுறையில் இவர் வீட்டில் திருமணங்கள் பாரத்வாஜ கோத்திரத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு.... இது சாஸ்திரப்படி தவறுதானே....

திருமண சடங்குகள் நடக்கும் போது பெண்ணின் பிரவரம் சொல்லி கோத்திரம் மாற்றுவார்களே அது போல, அக்னி குலதெய்வம் சாட்சியாக மந்திர பூர்வமாக சிறு குழந்தையாக இருக்கும்போதே சுவீகாரம் எடுக்கப்பட வேண்டும்... அது மட்டுமே உத்தமம்.... வளர்ந்து பின் குடும்ப அழுத்தம்/ சொத்துக்காக தத்து எடுப்பது கேடுதான்...

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.... வளர்ந்த பின் ஸ்வீகரிப்பது குல ஆச்சாரங்களை காப்பாற்றாது....

சரி, எது எப்படியோ! என் குலதெய்வம் எது என்று தெரியவில்லை... நான் என்ன செய்வது?!



பிறந்த மண்ணை விட்டு வேறிடம் சென்றவர்கள்.... முன்னோர்களை விட்டு விலகி போனவர்கள், கோத்திரம் மாறி சுவீகாரம் சென்றவர்கள் என இப்போது பெரும்பாலான குடும்பங்களுக்கு குல தெய்வம் எது என்றே தெரியவில்லை....

ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கு கிராம தேவதைகள் அய்யனார் வம்ச பெரியோர்களே குல தெய்வமாக இருந்து வந்துள்ளது...

எனவே, அவரவர் பூர்வீக கிராம தேவதைகள்/ கிராமத்து சாமிகள் தான் குலதெய்வமாக ஏற்கப்பட்டதாக புரிகிறது....

குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு...

Globalisation இல் மண்ணை விட்டு விலகி வந்து விட்டோம்...

வீட்டில் பெரியவர்களுக்கும் இதே கதி... குலதெய்வம் தெரியவில்லை...

இனி ஒரே வழி, ஜோதிடம்!



நல்ல திறமையான ஜோதிடரை அணுகி நம் ஜாதகம் கொடுத்து - பிரசன்னம் மூலமாக குல தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் வழி.

அதற்காக, ஒவ்வொரு ஜோதிடராக மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டே சென்றால் அதை விட கேலிக் கூத்து எதுவும் கிடையாது...

நம்பிக்கை தான் முக்கியம்....

அப்படி கண்டு பிடித்த குலதெய்வத்துக்கான ஆராதனையை இனி வரும் காலங்களில் விடாமல் செய்து வருவதும் மிகவும் அவசியம்.

வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் குலதெய்வ ஆராதனை இடம் பெறவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் குலதெய்வ உபாசனை செய்ய வேண்டும்.

நம்முடைய குலதெய்வத்தை தொலைத்து விட்டு வேறு தெய்வத்தை நாடி இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கூடாது என்பதற்காகவே முந்தைய பதிவுகளில் அத்வைதம் குறித்தும் சொல்லி இருக்கிறேன்....

கடவுள் என்பவர் அனுக்கிரகம் மட்டுமே செய்வார்... ஒரு போதும் நம்மை தண்டிக்கப் போவதில்லை...

அப்படி, குலதெய்வம் அறிய வீட்டில் இருக்கும் மூத்த ஆண் வாரிசு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்வது உத்தமம்.

அல்லது, யார் பிரசன்னம் பார்கிறாரோ அவர் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தும் அறியலாம்...

குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு/ கிராம - எல்லை தெய்வங்கள் என்று சொல்லி இருந்தேன்....

நினைவு இருக்கிறதா? இன்றும் கூட கிராமங்களில் காப்பு கட்டுதல் என்று சொல்லுவார்கள்..... ஊருக்குள் வந்தவர்கள் திருவிழா முடியும் வரை ஊரைவிட்டு போகக்கூடாது... என்று நிறைய கட்டுப்பாடுகள் உண்டு....

அதனால், தந்தை அல்லது பாட்டனாரின் பூர்வீக கிராமம் நமக்கு தெரிந்தால் அதையும் வெளிப்படையாக ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெற வேண்டும்...

ஜோதிடருக்கு பணம் கொடுக்கிறோம், அதனால் அவரே சொல்லட்டும், என்று அதிகார போதையோடு ஜோதிடரை அணுக வேண்டாம். நமக்கு தெரிந்த/ நம் பக்கத்து தகவல்களை / நம் சந்தேகங்களை ஒளிமறைவு இல்லாமல் ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெறுவோம்.

அதற்காக ஜோதிடர் மாற்றி ஜோதிடர் என்று அதீத ஆர்வக் கோளாறு காரணமாக தேடிக்கொண்டே திரிவது அபத்தம்!

நம்பிக்கை என்பது பலம். தேடிக்கொண்டே இருப்பது பலவீனம்!

இனி, இந்த தொடரை படிக்கும்போது நமக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து பேசுவோம்.

எல்லாம், சுபமாக நிறைவு பெறுவோம்!


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்.

வியாழன், 9 நவம்பர், 2017

கண்ணனின் கோபம்....

கோகுலத்தில் ஒரு நாள் வாசல் நிலைப்படியில் கண்ணன் உட்கார்ந்து இருந்தான்...

நரசிம்மன் இருக்கை அது... ஆகவே கோபமாகத்தான் இருந்தான்.... ஆனால் யசோதைக்கு என்ன தெரியும்?!

கிருஷ்ணா சாப்பிட வாடா...

கண்ணா, பாடுத்தாதேடி என் செல்லம் சாப்பிட வாடி....

உனக்கு பிடிக்கும் என்று அவல், வெல்லம், வெண்ணெய்.... எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.... வாடா....

எதற்குமே பதில் இல்லை...

கண்ணன், உம் .... என்று கோபமாகவே... இருக்க....

யசோதை எழுந்து வந்தாள்... செல்லக் கண்ணா... ஏண்டா கோபம் உனக்கு....

கன்னத்தில் கை வைத்த யசோதை யிடம் இருந்து முகத்தை திருபிக் கொண்டான் ஸ்ரீ கிருஷ்ணன்...

என்னடா கோபம் உனக்கு?

நீ, என் காதை பிடித்து நேற்று திருகினே... எனக்கு இன்னமும் அது வலிக்கிறது....

அதனால் உன் மேலே கோபம் .... கண்ணன் பவள வாய் திறந்து மழலை பிரவாகமாக....

யசோதா சொன்னாள்....

அட அசடு....

ஆதி மூலமே என்று எங்கிருந்தோ யானை கூப்பிட்டால் உன் காதில் விழுகிறது...

தொழுவத்தில் கட்டி இருக்கும் மாடு கத்தினால் உன் காதில் விழறது....

கோபிகைகள் அவரவர் வீட்டில் பால் கறக்கும் சப்தம், தயிர் கடைந்து வெண்ணெய் திரட்டும் சப்தம் உன் காதில் விழுகிறது...

க்ருத யுகத்தில் நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் சுட்டிக் காட்டி சொன்ன தூண் அடையாளம் துவாபர யுகத்தில் உன் காதில் கேட்கிறது....

ஆனால், நான் சாப்பிட வா என்று கூப்பிட்டால், வெண்ணெய் திருட போகாதே என்று சொல்வது மட்டும் உன் காதில் விழுவதே இல்லையே.... அதனால் உன் காதில் இருக்கும் குண்டலத்தில் ஏதோ குறை இருக்கிறதா அல்லது காதுக்கு உள்ளே அழுக்கு ஏதாவது இருக்கா என்று திருகி உள்ளே கூர்ந்து பார்த்த போது நீ திமிறி ஓடிவிட பார்த்தாய்.... அதனால் கொஞ்சம் கெட்டியாக அழுத்தி பிடிச்சுட்டேன்டா குழந்தாய் என்று யசோதை சொல்ல...

கண்ணன் வெண்ணெய் கிண்ணத்தை யசோதை கையில் எடுத்துக் கொடுத்து ஊட்டி விடு அம்மா என்றான் குழந்தையாக....

எவர்கிங் கற்பனை

எழுதியவர் :- திரு எவர்கிங் ஏகாம்பரம் (சங்கரன் கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்

துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம்

*துஷ்ட நிக்ரஹம்*
*சிஷ்ட பரிபாலனம்*

துஷ்ட நிக்ரஹம் என்பது சமூகத்துக்கு, சூழலுக்கு கேடு விளைவிப்பவர்களை அழிப்பது...

சிஷ்ட பரிபாலனம் என்பது தர்ம நெறியோடு வாழ்பவர்களை ஊக்குவித்து நலம் சூழ வைப்பது....

இவை இரண்டையும் பகவான் ஒருவரே செய்கிறார்....

அரக்கர்களை அழித்து தேவர்களை ரக்ஷித்தல்....

அதெப்படி, ஒரே கடவுள் /பரம்பொருள் உயிர்களிடத்து பேதம் பார்க்கலாம்?!

எல்லாவற்றையும் படைத்தது இறைவன் தானே.... அவனுடைய படைப்பில் அவனே எப்படி பேதம் பார்க்கலாம்?

போலீஸ் DC இருக்கிறார்.... அவர் தன் பிள்ளையிடத்தே, மனைவியிடம் அன்பாக இருக்கிறார்... ஆனால் அவரே திருடனிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்....

அட போப்பா.... அது மனித இயல்பு/ உணர்வு என்று நீங்கள் முணுமுனுப்பது காதில் விழுகிறது...

தெய்வம் மனுஷ ரூபேனாம்.... ஒவ்வொரு உயிரிடத்தும் பரம்பொருள் நிறைந்து இருக்கிறான்.... எனவே இயல்பு ஒன்றுதான்... மனிதனின் செய்கை பேதம்.... காட்சி பேதம்.... கடவுள் மாசற்ற சோதி.... நாம் நம் வினைகள் படி...

சரி, மனித சுபாவம் வேறு வேறு குண வெளிப்பாடுகள்.... இயற்க்கை எல்லோருக்கும் பொது தானே...

சென்னை வாசிக்கு மழை கொடுமையாக... அதே மழை விவசாயிக்கு அமுதமாக....

சில இடத்தில் விவசாயிக்கு கூட மழை நாசம் உண்டு பண்ணி விடுகிறதே... இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று....

முன்பெல்லாம் மாதம் மும்மாரி மழை.... தேவைக்கு..... பத்தினிப் பெண்கள், பெய் எனப் பெய்யும் மழை... ஆனால் மனிதன் இயற்கைக்கு எதிராக அதீத ஆசையில் .... நிலத்தடி நீரை உறிஞ்சி... சுற்றுச்சூழலை எதிர்க்கத் துவங்க.... அன்னத்தை விட /பசியைவிட

தண்ணீர்/தாகம் முக்கியம்... அதனால் நிலத்தடி நீரை பெருக்க/குடிநீர் பஞ்சத்தை முதலில் போக்க - அதே கடவுள் விவசாயிகளை தண்டிக்க வேண்டியதாகி விடுகிறது...

பசி பஞ்சம் வறட்சி என்பது அவரவர் கர்ம வினை... இதை நிவாரணம், நஷ்ட ஈடு என்று அடுத்தவர் மீது சுமத்தும் போது நமக்கான தண்டனை நீடிக்கப் படுகிறது...

இதை இப்படியும் யோசிக்கலாம்.... சாலையோரம் இட்லி சுட்டு விற்கும் ஆயாவுக்கு GST இல்லை.... நிறைய சம்பாதிக்க ஆசை பட்டு மல்டி குசின் உணவு விடுதிக்கு GST உண்டு...

சிறு விவசாயிக்கு நஷ்டம் கூட சில ஆயிரங்களில்... ஆனால் புறம்போக்கு நிலங்களை வளைத்து அதிக நீர் உறிஞ்சி, அதிக ரசாயனங்களை பயன் படுத்திய பெரு விவசாயிக்கு பெரிய நஷ்டம்....

Fresh super மார்க்கெட் அருகில் கீரை விற்கும் கிழவியிடம் புதிய கீரை கட்டு ₹5.... அதே கீரை Fresh பஜாரில்... 3 நாட்கள் முன்பு வந்தது, குளிர் பெட்டியில் வைத்து கட்டு ₹30....

இது, வாடிக்கையாளரின் வரட்டு பேராசை கர்ம பலன்....

கடவுள்/இயற்க்கை விஷயத்தில் துஷ்ட நிக்ரகம் /சிஷ்ட பரிபாலனம் பார்த்து விட்டோம்.... இனி, செயற்கை யில்....

Induction stove இல் tea போட தண்ணீர் கொதிக்க வைத்து, tea தூள் அள்ளி போட்டேன்... சிறிதளவு தூள்... அடுப்பின் plate மீது, வட்டாவை சுற்றி விழுந்தது.... உடனே அந்த பகுதியில் இருந்த அந்த tea தூள் சிதறல் களை வெறும் கைகளால் சுத்தம் செய்தேன்... என் கைகளுக்கு சூடு தெரியவே இல்லை.... பாத்திர நீர் கொதிக்கிறது... வடிவேல் காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது... மின் கம்பத்தில் தொங்கும் தன் காதலியின் உள்ளாடையை எடுக்க மின் கம்பத்தில் ஏற.... நண்பர் ஒருவர் எச்சரிப்பார்.... வடிவேலு சொல்லும் பதில்.... போடா.... இவனே.... இம்புத்தூண்டு குருவி மின் கம்பியில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடிட்டு போகுது.... எனக்கு தெரியாதா என்று....

மனிதன் நம்பும் வரை பிரச்சனை இல்லை... அதே hot plate stove மீது தன் கையில் இருக்கும் tester ஐ வைத்து ஆராயும் போது....

குனோ பேதம் எல்லா தரப்புக்கும் பொது... மனிதன் படைத்த induction stove பேதம் பார்க்கும்போது, கடவுள்?!

எழுதியவர்:- திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

வெள்ளி, 27 அக்டோபர், 2017

ரத்த நாளங்கள்

இந்த வரியை நாம் அடிக்கடி சிலநாட்கள் முன்பு விளம்பரமாக நதி இணைப்பு என்று ரஜினி சொல்ல கேட்டோம்....

இந்த தேசத்தில் நதிகள் ரத்த நாளங்களாகவும் ஆங்காங்கே உள்ள /இருந்த நீர் நிலைகள் recharge point ஆக விஞ்ஞானம்/ மெய்ஞ்ஞானம் கலந்து அமைக்கப்பட்டு உள்ளன....

கோவில் உள்ளே திருக்குளம்/தீர்த்த கிணறு இதே முறையில்....

இன்று அநேகமாக 90% கோவில்களுக்கு கருவறை உள்ளே பைப்பை மூலம் தண்ணீர்... காரணம் நீர் நிலை ஆக்கிரமிப்பு அழிப்பு அதனால் நிலத்தடி நீர்மட்டம் தேய்ந்து இந்த நிலை...

ஏற்கனவே என்னுடைய பதிவில் கோவில் தீர்த்தவாரி - water resources recharge குறித்து எழுதி இருந்தேன்....

இப்போது நாட்டின் நீர்நிலைகள் அமைவிடம் குறித்து இங்கே எழுத/புரிய அமைவிடம் location/ நீர்மட்டம் water லெவல்/ அளவுsize (புரி்தலுக்காக ஏரி குளம் கிணறு) அவற்றின் முறையான பராமரிப்பு எவ்வளவு இனிமையான பயன்பாட்டை தரும் என்பதை விளக்கும் காணொளிகள் இணைப்பு.

காவேரி யில் 1 பிடி மணல் கூட அள்ளாமல் ஆக்ராமிப்பு இல்லாது கோரை/நாணல் நீக்கி கழிவுகளை கொட்டாமல் இருப்போமானால் ஆண்டுக்கு 150 TMC தண்ணீர் கிடைத்தால் வருடம் 365 நாளும் போதுமான 5000 கனஅடி தண்ணீர் ஓடவிடலாம் என்றே நம்புகிறேன்....



தண்ணீர் தண்ணீர் என்று மக்கள் போராடுவது புது மணல் உருட்டி வர /குவாரி அமைத்து கொள்ளை அடிக்க/நாம் கலக்கும் கழிவுகளை அடித்துச் செல்ல.... கோரை நாணல் அகற்ற தூர் வார என்று அரசு பணத்தை கொள்ளை அடிக்கவே!

எழுதியவர் திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழ் கடவுள் முருகன்

மதுரை தமிழ் சங்கத்தில் தலைமை கவிஞனாக அகஸ்தியர் முன்பாக இருந்தாராம்...

இப்போ கூட முப்பாட்டன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்....

சரி,

முருகன், ஜாதி கலப்பு விவாகங்களை ஆதரித்தார்.... குறவள்ளியை மணந்தார்.... இன்னொரு பக்கம் தெய்வானை என்னும் தேவகன்னியை திருமால் மகளையும் கல்யாணம் கட்டிக்கிட்டார்.....

சிவன் காடுடைய சுடலை பொடி பூசி.... 4ஆம் வர்ணம்... திருமால் க்ஷத்ரியன் அல்லது இடையன் இரண்டு அல்லது மூன்றாம் வர்ணம்.....

4ம் வர்ணத்து மகன் குறத்தியை மனந்தது புரட்சி இல்லைதானே.....

ஆனால் 2 அல்லது 3 ஆம் வர்ணத்து மகளை மணந்தது தர்மபுரி, நாமக்கல், உடுமலைப்பேட்டை போல ....

நன்றி.....

கவுரவ கொலைகள் அப்போது இல்லை.....

நீரிடு நெற்றியும் நீண்ட புருவமும்..... வரி 34 ப்ரம்மணர் அல்லாத பாலன் தேவராயன் எழுதி இருக்கார்......

41 வது வரி..... முப்புரி நூலும் முத்தணி மார்பும்.....

தை பூசம், கார்த்திகை தீபம் முருகனின் ப்ரிய நக்ஷத்திரங்கள் கூட தமிழ்நாட்டு விழாக்களே....

வடநாட்டு கடவுளர்களுக்கு பிறந்த நாள் திதியை வைத்து... கோகுலாஷ்டமி, ராம நவமி, விநாயகர் சதுர்த்தி.... தமிழ் கடவுள் முருகனுக்கு birth day நக்ஷத்திரம் வைத்து...
கேரளா நிகழ்வுகள் கூட திருவோணம் வச்சித்தான் (திராவிட நக்ஷத்திரம் வழக்கம்) ஆனால் கேரளா / தமிழ்நாட்டில் பிறந்த பிராம்மண சங்கரர் ராமானுஜர் ஜெயந்தி பஞ்சமி திதியை வச்சி... (ஆரிய திதி வழக்கப்படி)

திராவிட திசையில் (தென் திசையில்) அனைத்து நாயன்மார் / ஆழ்வார் மோக்ஷம் கூட நக்ஷத்திரப் படி....

திதியோ, நக்ஷத்திரமோ .... பூமி, கோள்கள் ஆகியவற்றின் சுற்றுக்களை வைத்து... குழப்பம் இல்லாமல் சரியாக கணிக்கப்பட்டு இருக்கிறது....

27 நக்ஷத்திரங்கள்
12 ராசிகள்
9 கோள்கள் என ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத எண்களாக இருந்தாலும் மாத பௌர்ணமிகள் /நக்ஷத்திரங்கள் எப்போதாவது மாறி இருக்கிறதா?! கோகுலாஷ்டமி, ராம நவமி திதிகள் கூட ரோகிணி/ புனர்பூச நக்ஷத்திரங்களை ஒட்டியே வருகிறது...

மன்னர்கள் ஜூலியர் சீசர், அகஸ்டஸ் (#ஆகத்து) க்கு முன்பு மாற்று மார்கத்தினர்களிடம் மாதங்கள் கூட மனித கர்ப காலமான 10தான்...

என்னோட, டவுட்டு..... பூணூல் ப்ரம்மணருக்கு மட்டுமா? எல்லா வர்ணத்தவருக்கும் உண்டா?

வட நாட்டு கைலாச ஈசன் மகன் முருகன் வரி 31 குண்டலியாம் சிவ குகன் ஆரிய கடவுளா? தமிழ் திராவிட கடவுளா?



பின் குறிப்பு...... புரிய வேண்டி உருவக உதாரண அடையாள புராணங்களில் எனக்கு குழப்பம் எதுவும் இல்லை..... ஆரிய திராவிட தமிழ் தேசிய பகுத்தறிவு ஜாதியவாதிகள் புரிதலுக்காக.....


எழுதியவர் திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

வியாழன், 5 அக்டோபர், 2017

ஆன்றோர் சிந்தனை

அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியறிகை தெரியாகாண் சாழலோ.
தோழியே
அருந்தவம் செய்த சனகாதி முனிவர்க்குக் கல்லால மரத்தின் கீழிருந்து அறம் முதலிய நான்கு வேதங்களையும் அவர்கட்கு உரைத்தருளிய காரணத்தை எனக்குத் தெளிவாகக் கூறுவாயாக!


தவமுடைய அவர்களுக்கு அறம் முதலிய நாற்பொருளையும் அந்நாளில் சொல்லியருளாவிடில் அந்தச் சனகாதியர்க்கு உலகின் இயல்பு தெரியாது போய்விடும் எனடபதனை அறிவாயாக.
---


ஆன்றோர் சிந்தனையில் இதுவரை மூவர் தேவாரத்தில் இருந்து ஒரு சில பாடல்களை பார்த்தோம்.. இன்று திருவாசகம் திருச்சாழல்.
நேரடி உரை பொருள் மேலே கொடுக்கப்பட்டு விட்டது... நாம், மாறுபட்டு சிந்திப்போம்...
---
அருந்தவருக் காலினகீழ் அறமுதலா நான்கனையும்
அறிய தவம் செய்தவர்களுக்கு பிரம்மச்சர்யம் கிருஹஸ்தாச்ரமம் வானப் பிரஸ்தம் சன்யாசம் எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய அறம் பொருள் இன்பம் வீடு போன்ற நல்லறங்கள் ஆகிய நான்கும் அவர்கள் காலின் கீழ் அமைந்து இருக்கும்...
அல்லது
அறிய தவம் செய்தவர்க்கு செம்மையான வேதங்கள் நான்கும் அவர்கள் ஆணையின் கீழ் இருக்கும்...
அல்லது..
கல் ஆல் மரத்தின் கீழ் ஞான அமுதம் அருந்த வருபவர்களுக்கு மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் ஒடுங்கிவிடும்...
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ ...
சனகாதி முனிவர் நால்வரும் தங்கள் ஆன்மாவை இறைவனிடம் ஏற்கனவே ஒடுக்கி விட்டார்கள்... ஆனாலும் இன்னமும் கூட தென்முகக் கடவுள் அவர்களுக்கு உபதேசித்தபடியே இருந்து கொண்டு இருக்கிறார்... அவர்களுக்கே சொல்லிகொடுத்து கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? அவர்களுக்குத்தான் ஞானம் உபதேசிக்கப்பட்டு விட்டதே... இனி இந்த ஈசன் எனக்கு அந்த உபதேசத்தை எடுத்து இயம்பினால் என்ன? தோழியே, நீதான் கொஞ்சம் எனக்காக சென்று அவனிடம் சொல்..
இங்கே அந்த தோழியாக அதாவது ஒரு இடைப்பட்ட துணையாக மணிவாசகருக்கு கிடைத்து இருப்பது அந்த இறைவனே... எனவே அந்த ஈசனாக சொல்ல வேண்டிய பதிலை அந்த தோழி வடிவில் இருக்கும் ஈசன் சொல்கிறார்...
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
அறிய தவம் செய்தவர்களுக்கு அறம் முதலான நான்கு வேதங்களை நான் (ஈசன்) அன்று உபதேசிக்காமல் இருந்து இருந்தால், அந்த சனகாதியருக்கு உலகத்தின் இயல்பு தெரியாமலேயே இருந்து இருக்கும்...
வீட்டிலே, நாம் பாராட்டபெரும் அல்லது பெரிய மனிதர்களுடன் கூடிய புகைப்படம் மாட்டி வைக்கிறோம்.. எதற்காக... நல்ல சுகமான நினைவுகள் நமக்கு அவ்வப்போது இருக்கவேண்டும்... நம்மை தொடர்ந்து வருபவர்களுக்கு அது ஒரு உற்சாகம் கொடுக்கவேண்டும்... அதனால் நல்ல தவம் செய்து இறைவன் வழியில் திருந்தி வருபவர்களுக்கு இறைவனே ஞான ஆசிரியனாக வந்து அறம் மற்றும் வேதங்களை அதன் பொருளை உபதேசிப்பான் என்பதை நினைவூட்டும் விதமாகவே தென்முகக் கடவுள் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டுகிறார்..
மேலும்,
ஞானத்திலே ஒன்றியவன் சிவோஹம் என்ற அந்த பேரானந்த நிலையில் ஒன்றிவிட்டால் மீண்டும் அவன் அதிலிருந்து மீளுவது இல்லை... அதனால்தான் அவர்கள் அப்படியே அமர்ந்து அந்த ஆனந்த நிலையில் லயித்து நிலைசிற்பமாக இருந்துவிட்டார்கள்...
(மீண்டும் சொல்கிறேன்... தமிழ் புலமையோ, மெய்ப்பொருள் சித்தாந்த அறிவோ இல்லாத நான் உங்கள் நட்பினால் சிந்தித்து எழுதியவையே இவை.. இதில் குறை இருந்தால் அது எனது.. நிறை என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் நட்பால்... சிறுமதி படைத்த அடியேனால் இப்படி சிந்திக்க முடிகிறது என்றால், தமிழ் மற்றும் சித்தாந்த அறிவு பெற்ற மேன்மக்கள் இன்னும் நன்கு சிந்திக்க முடியும்.

எழுதியவர் : திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

கண் நோய் போக்கும் பதிகம்

ஆன்றோர் சிந்தனை...

பண் : செந்துருத்தி

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே
.

அடிகளே, நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில், யான் உமக்கு ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழி யொன் றில்லை ; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!
====
சுந்தரர் பெருமானுக்கும் நம் சிவபெருமானுக்கும் எப்போதுமே நெருங்கிய தோழமை தொடர்பு உண்டு... குறிப்பாக - காஞ்சியிலே சுந்தரருக்கு ஒரு கண்ணை அருளிய இறைவன் மற்றும் ஒரு கண்ணிலும் ஒளி அருளியது இந்த பதிகத்துக்கு பிறகே...

இங்கே, சிவில் சட்டங்களை தெளிவாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்... விற்றுக்கொள்வீர்... ஒற்றியல்ளேன்.. அதாவது சுந்தரர் ஆகிய தாம் பெந்தகத்துக்கு - குத்தகைக்கு - அனுபவிக்க மட்டும் உரிய அனுபவ பாத்யதை பட்ட சொத்தாக அல்ல... முற்றிலுமாக தானே சிவபெருமானிடம் விரும்பி எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் சுய நினைவுடன் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ஆட்பட்டவன்.. எனவே சுந்தரனாகிய தன்னால் ஈசனாகிய தங்களுக்கு பயன் இல்லை என்றால், என்னை வேறு யாருக்காவது விற்றுக்கொள்ளுங்கள்... அதை விட்டு விட்டு வேணாம் என்னும் பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று இப்படி கண்ணை பறித்து - கஷ்டம் கொடுத்து சோதிக்காதீங்க... என்று புலம்புகிறார்...

என்னய்யா பெரிய தப்பு பண்ணிட்டேன்... செய்யாத குற்றத்துக்காக என் கண்ணை பறித்து... அதுவாவது பரவாயில்லை... இப்போ ஒற்றை கண்ணன் ஆக ஆக்கி அலைய விட்டுவிட்டாய்?

அது என்ன ரெண்டு கண்ணையும் பரித்துவிட்டீர்... அங்கே அங்கே கைலாசத்தில் அகக்கண் ஐ பறித்தீர்... இங்கே பூலோகத்தில் புறக்கண்ணை யும் பறித்து என்ன விளையாட்டு இது?

இங்கே, நாம் கவனிக்க வேண்டிய விஷயம்...

சுந்தரர் தன் பூர்வ ஜென்மத்தை உணர்ந்து இருந்தார்... காரணம் - இந்த வரிகளில் தானே வந்து ஆட்பட்டதாக சொல்கிறார்... திருமண மேடையில் தாலி கட்ட இருந்த நேரத்தில் ஈசன் கிழவனாக சென்று ஒரு ஓலையை காட்டி இவரை ஆட்கொண்டார்.. அதன் பின் பித்தா பிறைசூடி பதிகம் பாடிய பொழுது தன்னை உணர்த்தி பூர்வ ஜென்மத்தை நினைவு படுத்துகிறார்...

சுந்தரருக்கு இரு மனைவிகள்.. ஒருவர் பரவை நாச்சியார்.. மற்றொருவர் சங்கிலி நாச்சியார்... ஈசன் சுந்தரரிடம் பறித்தது இரண்டு கண்களை... இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது...

திருக்கைலாய மலையில் ஈசனுக்காக நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு வரும் போது அங்கே இருந்த இரண்டு கந்தர்வ பெண்களை சுந்தரரின் கண்கள் கண்டு மையல் கொண்டு அதன் காரணமாக ஏற்பட்டதுதானே இந்த பிறப்பே...

ஈசனை தவிர வேறு நினைவே இல்லாமல் இருந்த சுந்தரர் மனதில் இரண்டு பெண்களை கண்டு காட்டிக்கொடுத்தது இந்த இரண்டு கண்கள் தானே... அதற்காகவே கண்களை பறித்தார்...

இங்கே, மீண்டும்... ஒரு கீதை வரி...

என்கண் கொண்டீர்.. நீரே பழிபட்டீர்... அன்று ஏன் கண்களுக்கு அந்த பெண்களை காட்டி என்னை ஆசை கொள்ள வைத்ததும் நீரே... காரணம் ஒரு நொடி என் மனதை விட்டு நீர் (ஈசன்) உங்கள் ஜோலியை பார்க்க போய்விட்டீர்... அதற்க்கு தண்டனையாக இந்த பிறவியை கொடுத்து... அவர்களோடு இல்லறம் நடத்திவிட்டு வா என்று உத்தரவிட்டதும் அந்த ஈசனே... பின் போன ஜென்மத்தில் செய்த தவறுக்காக விடாமல் வஞ்சம் வைத்து இந்த ஜென்மத்தில் கண்ணை பறித்ததும் ஈசனே... அதனால் இங்கே ஆட்டுவித்தவனே (இறைவனே) அந்த பழிக்கு உரியவன் ... நீ ... ஆட்டுவித்தாய்... நான் ஆடினேன்... இப்போது ... தண்டனை மட்டும் எனக்கு என்று நீரே பழிபட்டீர்....

சரி, ஒரு கண்ணை காஞ்சியிலே கொடுத்தே... இப்போ என்ன... இன்னொரு கண்ணு தரமாட்டியா? சரி அதையும் நீயே வச்சி வாழு...

கண்ணு போனாலும் நம் சுந்தரருக்கு பண் அந்த பண்ணுக்கு உள்ளே குசும்பு மட்டும் குறையவே இல்லை... இதுதான் நட்புக்கே உரிய உரிமை...

(திருவாருர் அருகே இருக்கும் என்கண் என்ற தலம்.. இங்கே இருக்கும் முருகன்... மிகவும் விசேஷமானவர்.... எட்டுக்குடி, என்கண் மற்றும் பொரவச்சேரி தரிசித்து இன்புறத்தக்க திருத்தலங்கள்)


எழுத்து :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கர்மவினை

"அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பது உன்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்"

இருவினை ஒப்பு மலபரிபாகம் என்பது எந்த சிததாந்தத்தை எடுத்துகொண்டாலும் ஒரு பொது விதி...

மனிதனின் நல்வினை தீவினை இரண்டும் சமமாக இருந்தால் மட்டுமே பரிபாகம் அடைய முடியும்... தீவினை அதிகமாக இருந்தால் நரகம் என்னும் மீண்டும் இந்த உலக வாழ்கையில் சிக்கி சின்னா பின்னம் ஆகுதல்...

நல்வினை அதிகமாக இருப்பின் சொர்க்க போக வாழ்கை...

நாம், என்ன நினைக்கிறோம்... எல்லாம் வினைப்பயன் படியே நடக்கும்... நம்மால் முன் செய்த வினைக்கு ஈடாய் இப்போது கஷ்டங்களை அனுபவிப்பதாக எண்ணிக்கொண்டு பேதைகளாக அறிவற்றவர்களாக உலாவிக்கொண்டு இருக்கிறோம்...

எனவே நாம் உய்வினை அதாவது இந்த ஆத்மா சீர் பெற்று வாழ வழிகளை நாடாது இருப்பது நமக்கு ஊனம்..

இறைவன் நமக்கு இந்த கைகளை எதற்காக அருளினான் தெரியுமா? தானம் கொடுப்பதும் பெறுவதும் கை... ஹோமத்திலே - பூஜையிலே - உற்பத்தியிலே கையின்றி அமையாது கர்மம்.. (நீரின்றி அமையாது உலகு போல)

ஆக, சரியை கிரியை போன்ற யோகங்களை நமது கைகளால் செய்து நமது எம்பிரான் திருவடிகளை போற்றி நாம் சிவனடியவர்களாக நம்மை அடையாளப் படுத்தி கொண்டுவிட்டால் -

செய்வினை வந்து எமை தீண்டப்பெறா...

அவ்வினை... இவ்வினை... இப்போ செய்வினை...ஒரே குழப்பமா இருக்கேடா அமாவாச...

இது கீதையின் சாரம்.. கர்ம யோகம்...

கண்ணன் சொல்படி பலனை எதிர்பாராமல் அர்ஜுனன் கர்மத்தில் ஈடுபடுகிறான்... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று...

அது போல நாம் இறைவன் அடியவர்களாக நம்மை உணர்ந்து செய்யும் செயல்கள் செய்யும் வினைகள் - அது நல்வினையோ அல்லது தீவினையோ... அவை நம்மை வந்த வரு தொல் வினையாக ஒருபோதும் வருத்தாது...

அதாவது இறைவன் பொருட்டு செய்யும் வினை எதுவும் இந்த ஆத்மாவை சேராது... நல்வினை தீவினை ஒப்பி மலபரிபாகம் பெற நாம் காத்திருக்க வேண்டாம்... நம்மை ஆட்கொள்ள வேண்டியது திருநீலகண்டமே...

அதாவது இறைவன் நம்மை தன்னுள்ளே ஆகுதியாக ஏற்றுவிட்டால்... நாம் அவன் கழுத்திலே இருக்கும் ultra violet treatment plant மூலமாக சுத்தீகரிக்கப்பட்டு அவனோடு சாயுஜ்யம் அடைந்து விடுவோம்...


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

சீர்காழி - திருஞானசம்பந்தர்

வைணவர்கள் வழக்கு ஒன்று உண்டு... எங்கு சுற்றியும் ரங்கனை வந்தடை.. அதுபோல நாமும் எங்கே சுற்றினாலும் - சைவத்தில் சம்பந்தர் பெருமானை வந்து அடைகின்றோம்.

இன்று நாம் எடுத்து சுவைக்க வேண்டிய வரி -

ஏடுடைய மலரான் முனைனாட்பணிந்து எத்த அருள் செய்த -

========
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
=========

சீர்காழியின் பெயர் பிரம்மா புறம்.. இங்கும் பரமன் பூஜித்ததாக வரலாறு. மஹா பிரளயகாலத்தில் ஈசன் தனது பரிவாரங்களுடன் ஒரு தோணி யில் ஏறி இங்கே வந்து அமர்ந்தாரம்... அதனால்தான் இறைவன் பெயர் இங்கே தோணியப்பர்.

ஆக, பிரம்மன் பூஜிக்க இங்கே சிவன் பிரத்யக்ஷமாக அமர்ந்து இருந்தார்.. பிரம்மன் பூஜித்து படைக்கும் தொழிலை கைவரப் பெற்றார்.

இதைத்தான் சொல்கிறாரா சம்பந்தர் பெருமான்...??

ஒன்று...

ஏடுடைய மலரான்... அதாவது ஏடுகள் பல உடைய மலர் தாமரை... அதன் மீது அமர்ந்து இருப்பவர் பிரம்மா. அந்த பிரம்மன் முந்தய நாட்களில் ஈசனை பணிந்து ஏற்ற அதனால் மனம் குளிர்ந்து ஈசன் பிரம்மனுக்கு அருள் செய்த பெருமான் இவர்..

இரண்டு...

பிரம்மன் வேதங்களின் அடிப்படையில் படைப்பு தொழிலை செய்கிறார்.. ஆக, அவர் கையில் எப்போதும் வேத புத்தகம் இருக்கிறது... ஏடுகளை உடைய (வேத புத்தகங்களை கையில் எப்போதும் வைத்து இருக்கின்ற) மலரிலே அமர்ந்து இருக்கும் பிரம்மன் முன்னை நாட்களில் பணிந்து ஏற்ற அருள் செய்த பெருமான் இவர்..

மூன்று...

ஏடுகளில் (வேத புத்தகங்களில்) உள்ள தோத்திர மலர்களால் உன்னை நான் பணிந்து ஏற்ற அருள் செய்கின்ற பெருமான் இவர்...

நான்கு...

நிறைய இதழ்கள் உடைய அடுக்கடுக்கான மலர்களால் எனது பூர்வ ஜென்மத்தில் உன்னை நான் பணிந்து ஏற்ற அதன் காரணமாக எனக்கு இந்த பிறவி கொடுத்த பெருமைக்கு உரிய பிரம்மபுரத்திலே அமர்ந்து இருக்கும் பெருமான் இவர்...

தமிழ் வழிக் கல்வி, புலமை, சித்தாந்த அறிவு எதுவுமே இல்லாத ஒரு பாமரனால் இத்தனை சிந்தனைகளை வெளிப்படுத்த முடிந்த போது - தமிழிலே புலமை பெற்ற - சைவ சித்தாந்த ஞானம் பெற்ற பெருமக்களால் இன்னும் எத்தனை எத்தனை பொருள் காண முடியுமோ நம்மை ஆளும் தகுதி உடைய பிள்ளையின் வரிகளில்...


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் - தன் முகநூல் பக்கத்தில்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ஹிந்தோளம், பூபாளம், காப்பி

இசை என்பது கடல்...நீந்தி கரை சேர முடியாமல் நாமும் அதிலே கரைந்து விடுவோம்...

காலையில் வீடுகளில் ஒலிக்க வேண்டிய ராகம் அதாவது நமக்கு positive energy கொடுக்க...

நம்மை சுற்றி alpha rays ஏற்படுத்திக்கொள்ள நாம் கேட்க வேண்டிய ராகம் பூபாளம்.

காப்பி/ஹிந்தோளம் போன்ற ராகங்களையும் கேட்கலாம். அதில் ஹிந்தோளம் குறித்து ஏற்கனவே பார்த்தோம்....

இந்த இசை பயணத்தில் இப்போது மீண்டும் ஒரு குறிப்பு...

ஸ ரி க ம ப த நி ஸ என்கிற 7 ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்?!

இதில், பூபாள ராகத்தில் ம நி என்ற இரண்டு ஸ்தாதிகள் கிடையாது....

புத்துணர்வை கொடுக்கும் ராகம்...

வித்யாசம் தெரிய வேண்டி இங்கே பூபாளம்/ ஹிந்தோளம் என்ற இரண்டு ராகங்களிலும் அமைக்கப்பட்ட பாடல் கொடுத்துள்ளேன்...

ஹிந்தோள ராகம்

https://m.youtube.com/watch?v=WpWqxNu3IoY

https://m.youtube.com/watch?v=0jaGqNkaQYk


பூபாள ராகம்

https://m.youtube.com/watch?v=0QOWiAuliAA

https://m.youtube.com/watch?v=RX7AxOPGtOM


காப்பி ராகம்

https://m.youtube.com/watch?v=PXQTGgXfago


https://m.youtube.com/watch?v=iil9OTjHEyE


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்

வசந்தா ராகம் / லலிதா ராகம்

வணக்கம் நண்பர்களே. மீண்டும் சொல்கிறேன். இசையில் கொஞ்சம் கூட ஞானம் இல்லாதவன் நான்.

இரவில் அமைதியான உறக்கம் தேடி net இல் சில இசை பதிவுகளை தேடிய போது ராகங்கள்/ பலன்கள் பற்றி பார்த்தேன்.... இன்னும் கொஞ்சம் விவரமாக உள்ளே சென்று தேட ஆரம்பித்தேன்....



High BP யை குறைத்து விடலாம், ஆனால் low BP / hypotension (abnormally low pressure) இருந்தால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினம். ராக ஆராய்ச்சியில் அதை குணமாக்க வழி இருக்கிறதா என்று தேடு என நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டார்....

அதற்காக இங்கே இன்னும் ஒரு படி முன்னேறி புதிய முயற்சியாக....

வசந்தா ராகம்....
வசந்தா ராகம்.... / லலிதா ராகம் இரண்டும் ஒன்று தானாம்.... மாறுபட்ட மேள கர்த்தா, ஷட்ஜ்ஜமம் என்று ஏதேதோ சொல்கிறார்கள்.... அதை புரிந்து விளக்க எனக்கு போதுமான ஞானம் இல்லை... எனவே screen shot அப்படியே இணைத்து உள்ளேன்.





Abnormal low pressure பிரச்சனையை குணமாக வசந்தா ராகத்தில் அமைந்த ஒரே பாடலை

ஆண் (KJY) பெண் (எம் எஸ்)குரலில் மூச்சு வாத்திய (நாதஸ்வரம்) இஞ்சிக்குடி brothers தந்தி வாத்தியம் (கம்பி வாத்திய மண்டோலின்) ஸ்ரீனிவாஸ் என்று 4 ஒலி பதிவு மற்றும் பாட்டுப் பாடவா என்ற திரைப்பட (அதிக பிரபலம் இல்லாத படம்/ நடிகர்கள்) பாடல் இளையராஜா / உமா ரமணன் பாடல்கள் இங்கே பதிவிட்டு உள்ளேன்....

https://m.youtube.com/watch?v=ya91zq84xcg

மீண்டும் சொல்கிறேன்... இசை ஆர்வலர்கள் தயவுசெய்து இதை ம் வையுங்கள்.... அல்லது ஆர்வமுள்ளவர்களிடம் forward செய்து உதவுங்கள்....

இந்த இசைவழி ஆரோக்கியம் நாளை நம்மில் பலருக்கும் நிச்சயமாக பயன்படும்.

நன்றி / வணக்கம்.

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்.

சனி, 16 செப்டம்பர், 2017

கல்யாணி ராகம்




திருமண வீடுகளில் இசைக்கப்படும் ராகம்....

இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை / மனதை சோகத்தில் / எதிர்மறை

இருந்து திசை திருப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்தி உயரும் ரத்த அழுத்தத்தை குறைக்கூடிய ராகம்....

கல்யாணி





https://m.youtube.com/watch?v=IBVrGAiqRGo

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

அமிர்தவர்ஷிணி

வர்ஷம் என்றால் மழை....

அமிர்தம் என்றால் உயிர் தரும்/ நிலைக்கும் மருந்து....

அமிர்த வர்ஷம் என்பது மண்ணின் உயிர் காக்கும் மழை என்று வைத்துக்கொள்வோம்...

உண்ணாவிரதம் இருப்போர் கூட நீர் அருந்தலாம்...

தண்ணீருக்கு தீட்டு இல்லை என்று சொல்வார்கள்....

தண்ணீர் தான் உடலின் பிரதான இயக்க அடிப்படை.

ரத்தம் / சிறுநீரகம் உயிரின் அத்தியாவசியம்....

அமிர்த வர்ஷினி ராகம்....



சிறுநீரக சீர் இயக்கம்/ நல்ல மழை பொழிய....

https://m.youtube.com/watch?v=46dpMsOjSHI

எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

மோகனம்

மோகம் என்றாலே ஆசை காதல் என்றுதானே அர்த்தம்...

இந்த ராகம் நமக்கு ஏற்படும் தலைவலி, மைக்ரான் எனப்படும் மண்டையிடியை போக்கவல்லது....



இது வரை சுலபமான ஏற்புக்காக சினிமா பாடல்களோடு உலாவி வந்தேன்....

மெட்டுக்குப் பாட்டு என்று திரை உலகம் வழி தவறிவிட்டது....

இது தமிழனின் பெருமை மிகு ராகமாம்....

ஐரோப்பிய நாடுகளில் கூட மோகன ராக சாயல் பிரதிபலிக்கிறதாம்...

எல்லோரையும் உருக வைக்கும் திருவாசகம் மோகன ராகத்தில் இசைக்கப்பட்டு மின்னுகிறது....

தமிழ் தாய் வாழ்த்து கூட மோகனம்தான்....


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

ஹிந்தோளம்

வணக்கம்...

Hing... பெருங்காயம்.... தெலுங்கில் ஹிங்குவா என்றும் சொல்லுவார்கள்.... காயம் 'க' கொஞ்சம் அழுத்தி படியுங்கள்....

காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையடா....

இந்த உடல்தான் காயம்.... இதில் அடைக்கப்பட்டு உள்ளது காற்று....

இந்த உடல் உள்ளே இருக்கும் காற்றால் அவதிப்படுவது வாயுக்கோளாறு.... இந்த வாயுக்கோளாறு சரி செய்ய hing அதாவது பெருங்காயம் நல்ல மருந்து....

இந்த ஹிங் hing வை தாளத்தோடு கலந்தால் *ஹிந்தோளம்*



ஹிந்தோளம் ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் வாயு மற்றும் வயிறு கோளாறுகளை போக்குமாம்....



ஹிந்தோளம் ராகத்தை சுத்ததன்யாசி ராகத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்...

புரித்தாலுக்காக....

உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் ஒலிக்கும்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - சுத்த தன்யாசி

உன்னால் முடியும் தம்பி தம்பி - ஹிந்தோளம்...

பின் குறிப்பு....

1. நான் சங்கீதம் முறையாக

அல்ல.... எளிமையான புரித்தாலுக்கான விளக்கம் காண முயல்கிறேன்.... அவ்வளவே.... interpretation தவறுகள் இருக்கலாம்....

2. இதர பிரபல பாடல் கள் குறிப்புகள் இணைப்பு....


ஹம்ஸத்வணி ராகம்

அன்னப்பறவை களின் ஒலி.... இசை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்களோடு துவங்குகிறது....

விநாயகர் குறித்த பல பாடல்கள் இந்த ராகத்தில் .... எளிமையான புரிதலுக்கு.... வாதாபி கணபதிம் ....

இந்த ராகம் நரம்பு சம்பந்த கோளாறுகளை நிவர்த்தி செய்யும்...

விநாயகரின் சிறப்பே தும்பிக்கை.... நரம்பு கூட்டமே....



இணைப்பு screen ஷாட் நிறைய தகவல் தரும்...

https://m.youtube.com/watch?v=Izrf9-JDntE

எழுதியவர் :- திரு. Sankaran Krishna murthy அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்

இசைப் பயணம் 1

இசைஆய்வாளர் திரு.நா.மம்மது (*மம்முது இஸ்லாமியர்*) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

“மருத நிலத்திற்குரிய சிறுபண் சுத்ததன்யாசி, இது ஆம்பல் குழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆம்பல் குழல் என்ற வார்த்தையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்
“ஆம்பலம் தீங்குழல் கேளாமோ தோழி” என்று கூறுகிறார்.
ஆம்பல் குழல் என்பது இன்று சுத்த தன்யாசி ராகமாக இருக்கிறது.”

சிலப்பதிகாரம் ஆச்சியர் குரவையில் வரும் பாடல் இது.

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!

"பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!" – ஆச்சியர் குரவை.

அதாவது,

பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்து ..... என்ற வரலாறு டுமீல் சிலப்பதிகாரத்தில் வருவது....இதை சொன்னவர்... ஒரு இஸ்லாமியர்....

அநேகமாக, கருநாய்நிதி, வீரமணி, சீமான் எல்லோரும் இப்போ தூக்கு மாட்டி தொங்கிடுவாங்க....

பின் குறிப்பு....

தர்மதுரை படத்தில் ஒலிக்கும் பாடல்,

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே....

சுத்த தன்யாசி ராகம்.............

https://m.youtube.com/watch?v=FQGC7uB6MJM

எழுத்து :- திரு .Sankaran Krishna Murthy அவர்கள்  

வியாழன், 12 ஜனவரி, 2017

சிரார்த்தம் எப்படி செய்வது ?


முன்னோர்களின் அனுபவ வார்த்தைகளே, சாஸ்திரங்கள். அந்த சாஸ்திரபடி, வாழ்க்கையை நடத்துவோருக்கு, ஒரு குறைவும் உண்டாகாது. சாஸ்திரங்களின்படி வாழ்க்கை நடத்திய, பீஷ்மரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது...
சிராத்தம் என்பதே சரி. சிரார்த்தம் என்பது தவறு. சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதினாலேயே இது, சிராத்தம் எனப்பட்டது. மற்ற கர்மாக்களை செய்யும் போது இருப்பதை விட, சிராத்தம் செய்யும் போது, மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும். ஒரு சமயம், பீஷ்மர், பித்ரு சிராத்தம் செய்யத் துவங்கினார். அதனால் பீஷ்மர் மிகுந்த சிரத்தையுடன், சிராத்தம் செய்து கொண்டிருந்த போது, பீஷ்மருடைய தகப்பனாரான சந்தனுவிற்கு, ஒரு எண்ணம் தோன்றியது. நம் மகன், நமக்காக சிராத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய சாஸ்திர நம்பிக்கையை, நாம் சோதனை செய்து பார்க்கலாம்... என, நினைத்து, பிண்டப் பிரதானம் கொடுக்கும் நேரத்தில்  பூமியை பிளந்து, கையை நீட்டி, மகனே பீஷ்மா... பிண்டத்தை என் கையில் கொடு... எனக் கேட்டார் சந்தனு. பீஷ்மரோ, தந்தையே... பிண்டத்தை, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைக்கச் சொல்லித் தான், சாஸ்திரங்கள் கூறுகின்றன. தந்தையின் கையில் கொடுக்கும்படி, அவை சொல்ல வில்லை... என்று சொல்லி, தந்தையின் கைகளை விலக்கி, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைத்தார். சந்தனு மகிழ்ந்து; பீஷ்மருக்கு ஆசி கூறி, அகன்றார். எனவே, சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை சிரத்தையுடன் கடைபிடித்து நடந்தாலே வாழ்வில் ஏற்படும் பாதி துன்பங்கள் மறையும்!

தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள்

1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் , ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளச் செய்ய வேண்டும்.

6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.

11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.

12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்

16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வண சிராத்தம் என்று பெயர்.

20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம் எனப்படும்.

21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.

22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள

26. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.

27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான்மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

28. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.

30. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷ சிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.

37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

40. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

41. “நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம்,பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.”

42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள் அளவும் சந்தேகம் கிடையாது.

45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்

51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும்.

54. மஹாளய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.

58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் (sailapathi) உள்ளது) அங்கு தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

- கணேஷ ஷர்மா 


எழுத்து வடிவம் :- Saliya maharishi🙏🙏