வெள்ளி, 29 செப்டம்பர், 2017

சீர்காழி - திருஞானசம்பந்தர்

வைணவர்கள் வழக்கு ஒன்று உண்டு... எங்கு சுற்றியும் ரங்கனை வந்தடை.. அதுபோல நாமும் எங்கே சுற்றினாலும் - சைவத்தில் சம்பந்தர் பெருமானை வந்து அடைகின்றோம்.

இன்று நாம் எடுத்து சுவைக்க வேண்டிய வரி -

ஏடுடைய மலரான் முனைனாட்பணிந்து எத்த அருள் செய்த -

========
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
=========

சீர்காழியின் பெயர் பிரம்மா புறம்.. இங்கும் பரமன் பூஜித்ததாக வரலாறு. மஹா பிரளயகாலத்தில் ஈசன் தனது பரிவாரங்களுடன் ஒரு தோணி யில் ஏறி இங்கே வந்து அமர்ந்தாரம்... அதனால்தான் இறைவன் பெயர் இங்கே தோணியப்பர்.

ஆக, பிரம்மன் பூஜிக்க இங்கே சிவன் பிரத்யக்ஷமாக அமர்ந்து இருந்தார்.. பிரம்மன் பூஜித்து படைக்கும் தொழிலை கைவரப் பெற்றார்.

இதைத்தான் சொல்கிறாரா சம்பந்தர் பெருமான்...??

ஒன்று...

ஏடுடைய மலரான்... அதாவது ஏடுகள் பல உடைய மலர் தாமரை... அதன் மீது அமர்ந்து இருப்பவர் பிரம்மா. அந்த பிரம்மன் முந்தய நாட்களில் ஈசனை பணிந்து ஏற்ற அதனால் மனம் குளிர்ந்து ஈசன் பிரம்மனுக்கு அருள் செய்த பெருமான் இவர்..

இரண்டு...

பிரம்மன் வேதங்களின் அடிப்படையில் படைப்பு தொழிலை செய்கிறார்.. ஆக, அவர் கையில் எப்போதும் வேத புத்தகம் இருக்கிறது... ஏடுகளை உடைய (வேத புத்தகங்களை கையில் எப்போதும் வைத்து இருக்கின்ற) மலரிலே அமர்ந்து இருக்கும் பிரம்மன் முன்னை நாட்களில் பணிந்து ஏற்ற அருள் செய்த பெருமான் இவர்..

மூன்று...

ஏடுகளில் (வேத புத்தகங்களில்) உள்ள தோத்திர மலர்களால் உன்னை நான் பணிந்து ஏற்ற அருள் செய்கின்ற பெருமான் இவர்...

நான்கு...

நிறைய இதழ்கள் உடைய அடுக்கடுக்கான மலர்களால் எனது பூர்வ ஜென்மத்தில் உன்னை நான் பணிந்து ஏற்ற அதன் காரணமாக எனக்கு இந்த பிறவி கொடுத்த பெருமைக்கு உரிய பிரம்மபுரத்திலே அமர்ந்து இருக்கும் பெருமான் இவர்...

தமிழ் வழிக் கல்வி, புலமை, சித்தாந்த அறிவு எதுவுமே இல்லாத ஒரு பாமரனால் இத்தனை சிந்தனைகளை வெளிப்படுத்த முடிந்த போது - தமிழிலே புலமை பெற்ற - சைவ சித்தாந்த ஞானம் பெற்ற பெருமக்களால் இன்னும் எத்தனை எத்தனை பொருள் காண முடியுமோ நம்மை ஆளும் தகுதி உடைய பிள்ளையின் வரிகளில்...


எழுதியவர் :- திரு sankaran Krishna Murthy அவர்கள் - தன் முகநூல் பக்கத்தில்

1 கருத்து:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 crore) All donors are to reply via Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு