செவ்வாய், 1 மே, 2018

சிருங்கேரி அன்னை சாரதாம்பாள் 8

ஞானி ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார்... வழியில் அவரை சோதிக்க எண்ணி, சில இளைஞர்கள், அய்யா, அங்கே இறந்து அழுகிய நிலையில் உள்ள நாயின் சடலத்தை பாருங்கள்... அதிலும் உங்கள் கடவுள் இருக்கிறாரா என்று வினா எழுப்பினர்!

ஞானி, பொறுமையாக ஆம், என்று பதில் சொன்னார்... அந்த இளைஞர்கள் அதை கொஞ்சம் விளக்கமாக சொல்லும்படி கேட்க...

அந்த நாயின் சடலத்தின் வாய் பகுதி பற்கள், அவை அமைக்க பட்டுள்ள நேர்த்தியை பார்த்தாலே புரியும்...

மேல் இரண்டு, கீழ் இரண்டாக 4 கூரான சிங்கப் பற்கள்... இரையை குத்தி வாகாக இழுக்க .. பின்பு, பின் வரிசையில் ரம்பத்தின் அமைப்பில் அந்த உணவை அரைத்து சிறு துகள்கள் ஆக்கி உள்ளே செலுத்த நாக்குக்கு எதுவாக... அந்த படைப்பின் நேர்த்தி இறைவன்...

கடவுள் நம் பார்வையில் தான் இருக்கிறார்...

வீட்டில் குருநாதர் திருவடிகளை ஆசையோடு வாங்கி வைக்கிறோம்... அதை காணும் போது அவர் முகத்தை ஒரு கணம் நினைத்து விட்டுபோகாமல், நாம் அவரோடு செலவிட்டு இனிமையான தருணங்கள்... குருவின் உபதேசத்தில் நமக்குப் பிடித்த சில சத்தான விஷயங்கள் என்று மனதின் திசையை ஒரு குறிப்பிட்ட வழியில் தொடர்ந்து கட்டுப்பாடாக செலுத்துங்கள். மனமும் ஒருமுகமாகும்... மனதுக்கு நல்ல விஷயங்கள் அசை போடும் பயிற்சி கிடைக்கும். கீழான சிந்தனை நேரம் படிப்படியாக குறையும்...

சரஸ்வதி அமர்வில் இப்படித்தான் நாம் சிந்தித்து பழக வேண்டும்... சரஸ்வதி வெள்ளை தாமரையில் அக்ஷ மாலை வேத புத்தகம் கையில் ஏந்தி அமர்ந்து இருக்கிறாள்... இவர் ஞான குரு தென்முக கடவுள் தங்கை... அவரும் ஸ்படிக ரஜத வர்ணம் (ஸ்படிகம்/ வெள்ளி) சரஸ்வதியும் அண்ணன் போல... வெள்ளை நிற பிரியை... புடவை, தாமரை.. தக்ஷிணாமூர்த்தியும் வீணை கையில் உடையவர்... தங்கையிடமும்.... இருவர் கைகளிலும் அக்ஷர மாலை, வேத புத்தகம்...

இப்படி மனதை ஒன்றை தொடர்ந்து இன்னொரு சத் விஷயத்தால் உருவம் பற்றி சிந்தித்தால் - அதுவே சிறந்த மனப் பயிற்சி வழி...

சிருங்கேரி மடம் வித்யாரண்யர், ஹரிஹரர், புக்கர் காலங்களில் கிபி 14ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப் பட்டது... ஏற்கனவே ஆதி சங்கரர், சங்கரர் அவர்களின் வெவ்வேறு காலங்கள் குறித்து பேசினோம்...

இனி, ஸ்ரீ மடங்கள் root/ ஸ்தாபனம் குறித்து பேசுவோம் 9இல்

எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி தமது முகநூலில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக