ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சீக்கியர்கள்

வீர சைவம், வீர வைணவம் போல இவர்கள் வீர ஹிந்துக்கள்...

இஸ்லாமை எதிர்க்க அழிக்க உருவான ஒரு உன்னதமான வீர மக்கள் கூட்டம்...

சங்க அமைப்பு ஒன்றில் தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு இருந்த போது, நெல்லையை சேர்ந்த கா. ஆறுமுகம் என்ற ப்ரச்சாரக் அவர்களின் பௌதிக்கில் கேட்ட ஒரு விஷயம்...

சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப் நூலில்... ராம என்ற சொற்கள் உள்ள பக்கங்கள் அணைத்தையும் நீக்கி விட்டால், அட்டைக்கும் நூலுக்கும் நடுவில் உள்ள binding இணைப்பு வெற்று காகிதம் 2 மட்டுமே மிஞ்சும் என்று சொன்னார்...

இப்படி பட்ட புனித நூல் ஒன்றை தங்கள் வேதம் என்ற சீக்கியர்கள், வெள்ளைக்கார கிறித்தவ கபோதி மெக்காலே யின் வே(வி)ஷத்தில் மயங்கி கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்துக்களுக்கு எதிராக மாறிப் போனார்கள்...

இந்திய ராணுவத்தில்  முதலிடம் வகிப்பது Sikh Regiment தான்... அப்படி ஒரு நேர்த்தி...   குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு ஒன்று நாட்டுக்கு என்ற கொள்கை இன்றளவும் உடையவர்கள்.

இப்போது கூட என் மனதை உறுத்தும் ஒரு  வருத்தம்....

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தமிழன் என்று மார்தட்டிக் கொண்ட ஒரு மாற்று நாட்டு அடையாளம் கொண்ட மக்களை அந்த நாட்டு அரசு... காங்கிரஸ்/தி மு க உதவியுடன் அழித்தது... அது கூட உள்நாட்டுப் போரில் இருந்து நாட்டை காப்பாற்ற...  ஆனால் தமிழ் மக்கள் இன்றும் காங்கிரஸ் தி மு க வை ஆதரித்தே வருவதில் கூட ஒரு ஞாயம் உண்டு... காரணம்... பிரபாகரன் திமிர்த்தனம்... இந்தியாவின் பிரதமராக இருந்த நபரை சதி செய்து கொன்றது... முக்கியமாக இலங்கை தமிழன்/இந்தியத்தமிழன் என்ற துவேஷம் கடைசிவரை அவர்களிடம் இருந்தது...

பிந்திரன் வாலே செய்த சதியும் குற்றமே/தேச விரோதமே... இந்திரா கொலையும் சதிதான்... ஆனால்... இந்திரா செய்த குற்றமாக சீக்கியர்கள் கருதியது, பொற்கோவிலுக்குள் இந்திய அரசு ராணுவத்தை  அனுப்பியது...  ஒரு வாதத்துக்காக யானைக்கும் பானைக்கும் சரி என்று வைத்துக் கொண்டால் கூட ...  இந்திரா படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் கொடுத்த விலை மிக மிக பெரியது.... அரசே தன் சொந்த மக்களை வேட்டையாடியது...

இத்தனைக்கு மேலும் சீக்கியர்கள் தங்கள் பிராந்தியங்களில் காங்கிரஸ் அரசுகளை/ வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தார்களே!!

அரசியலில்/ மத பிரசாரத்தில் தங்களின் சுயத்தை இழந்த வீர இந்துக்கள் கூட்டம் சீக்கிய இனம் என்பதை சொல்லவே மிக நீண்ட பீடிகை.

அம்ருத கலஸம் கீதை என்ற நூல்... ஸ்ரீ ராம் கோபால ரத்னம் அவர்களின் அருமையான உரை நூல்...  இன்று விடியலில் அதை படித்துக்கொண்டு இருந்தேன்...  அத்யாயம் 12 பக்தியோகம்... ஸ்லோகம் 14

ஸந்துஷ்ட:  ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிச்சய:
மய்யர்பபித-மனோ-புத்திர்-யோ மத்பக்த ஸ மே ப்ரிய:

இதில் வரும் த்ருட நிஸ்சயம்.... ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ப்ரியமான பாவனை... இந்த வார்த்தையின் அர்த்தம் விளக்க ஸ்ரீ ராம் கோபால ரத்னம் சொல்லிய விஷயங்கள்...

சீக்கிய குருமார்கள் மன உறுதி மிகவும் உறுதியானது...

சீக்கியர்களின் 6ஆம் குரு ஸ்ரீ அர்ஜுன் தேவ்.... இஸ்லாமியனாக மதம் மாற மறுத்த காரணத்தால் இரும்புச் சட்டியில் உயிருடன் வாட்டி வதைக்கப்பட்டார்....

இந்த படு பாதகத்தை /செயலை செய்தது கொடுங்கோல் துலுக்கன் ஷாஜகான்.

9ஆம் குரு ஸ்ரீ தேஜ் பகதூர்... அவருடைய 3 பிரதான சீடர்களுடன் கைது செய்யப்பட்டு இஸ்லாத்தை எற்க வற்புறுத்தப்பட்டனர்...

தில்லி சாந்தினி சவுக்கத்தில் தேஜ் பகதூர் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு அவருடைய கண் முன்னேயே சீடர்கள் ஒவ்வொருவராக  சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்...

ஒரு சீடன் தலை உயிர் /உணர்வு நிலையில் இருக்கும் போதே ரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டது...

மற்றும் ஒருவன் உடலில் பஞ்சு பொதிகள் சேர்த்து கட்டி தீ வைக்கப்பட்டது...

மூன்றாவது சீடன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் அழுத்தி கொல்லப்பட்டான்.

இவை அனைத்துக்கும் பிறகும் மதம் மாறாத தேஜ் பகதூர் தலை வாளால் சீவி கொல்லப்பட்டார்.... 

இத்தனை அட்டூழியம் செய்த கொடுங்கோல் துலுக்கன் ஔரங்கசீப்...

தேஜ் பகதூர் மகன் 10ஆம் குரு கோவிந்த ஸிம்ஹன் அவர்களுடைய 2 மகன்கள் போரில் கொல்லப்பட்டனர்.... மற்றும் 2மகன்கள் 9 வயது ஜெராவர் 7 வயது ஃபதே சுற்றிலும் கொதிக்கும் சுண்ணாம்பு கல் சுவர் எழுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்...

ஓவ்வொரு கல் வைக்கப்படும் போதும் மதம் மாற வற்புறுத்தப்பட்டனர்...  ஆனால் அந்த குழந்தைகள் த்ருட உறுதி.... நம்மை வியக்க வைக்கிறது... மரணம் ஏற்ற அவர்கள் இஸ்லாம் மார்கத்தை எற்க மறுத்துவிட்டார்கள்...

குரு கோவிந்த ஸிம்ஹனுக்குப் பிறகு...  பந்தா பைராகி ... அவருடைய 1வயது குழந்தையை கொன்று, அந்த சடலத்தை கூறு போட்டு அந்த குழந்தையின் இருதயத்தை வெட்டி பந்தா பைராகி வாயில் திணித்தனர் துலுக்க பன்றிகள்...

92 நாட்கள் பந்தா பைராகி புதுப் புது விதமாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் பந்தா பைராகி உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்டு / சிதைக்கப்பட்டு ...

அப்போதும் மதம் மாறாத உத்தம குருமார்கள் சீக்கிய புண்ணியர்கள்...

இவர்களில் யாரேனும் ஒருவர் தங்கள் த்ருட நிச்சயத்தை விட்டுக் கொடுத்து இருந்தால்?!

ஆனால் இன்று wine, ரொட்டித்துண்டு, காசு, எச்சில் பெண்கள் மீது ஆசை கொண்டு... மதம் மாறி... காசுக்கு தேச, மத விரோத காங்கிரஸ்/ கம்முயுனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சீக்கிய/ ஜைன/ஹிந்துக்களை நினைத்தால்...

எழுதியவர் :- திரு. சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் முகநூலில்..

கீதை அத்யாயம் 17


ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்.
*******************************
ஸ்ரத்தை என்றால், அதிக கவனம் எடுத்துச் செய்ய வேண்டியது... மனம் ஒருமித்து...  வீட்டில் முன்னோர்களுக்குச் செய்யும் திதி... ஸ்ரார்த்தம் என்று சொல்லுவார்கள்...

த்ரய ... என்றால் 3

Three...

த்ரயார்ஸேவ ப்ரவரன்... என்றால்...  பெரியோர்களை நமஸ்கரிக்கும் போது அபிவாதயே சொல்லப்படும் அதில் தங்கள் பூர்வீகம் குறித்து.... உதாரணமாக கௌண்டின்ய கோத்திரம் என்றால் சதுஸ்ஸாகர பர்யந்தம் கோ, ப்ராம்ணேப்ய சுபம்பவது 1. வாசிஷ்ட 2. மைத்ராவருண 3 கௌண்டின்ய த்ரயார்ஸேவ என்று துவங்கும்... 

தர்பணம் கொடுக்கும் போது கூட பித்ரு (அப்பா) வசு ரூபம், பிதாமக (தாத்தா) ருத்ர ரூபம், ப்ரபிதாமக ஆத்ய ரூபம் (அப்பாவின் தாத்தா) என்று 3 தலைமுறை குறிக்கப்படும்...

த்ரிநேத்ரம் (சிவனுக்கு 3 கண்கள்)
த்ரிகுணம் (ஸத்வம் ரஜோ தமஸ்)
த்ரிதளம் (வில்வம்)
த்ரிகாலம் (ப்ராத, மாத்யாநிக, சாயம் சந்தியா)
மனம் வாக்கு காயம்
பதி பரமாத்மா, பசு ஜீவாத்மா அல்லது உயிர், பாசம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறுபடுத்தி நிற்க்கும் ஆணவம், கர்மம், மாயை என்ற 3 மலங்கள்...

வி-என்றால் மேலான... (நாயகர், விநாயகர்)

பாகம் என்றால் பகுப்பு...

யோகம் என்றால் அப்யாசம்/பயிற்சி...

ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்... இப்போது புரிகிறதா?!

கீதையில், தலைப்புகள் கூட எத்தனை கவனமாக அழகாக பொருள்பட நேர்த்தியாக அமைக்கப்பட்டு உள்ளது!!!

இந்த அத்யாயத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, மனம் வாக்கு காய சுத்தி, ஸத்வம் ரஜோ தமஸ் ஆகியவை குறித்தும் அதற்கான உணவு முக்கியமாக அதன் ருசி,  அதன் பலன், குறித்து சொல்கிறார்...

இனி, இங்கு சொல்லப்போகும் விஷயத்துக்கு எனக்குள் வித்திட்டவர் ஸ்ரீ ராம கோபால ரத்னம் (ஸ்ரீ RGR வழியில்)

பகவான், உணவு வகையை பற்றி மட்டும் சொல்லாமல், மனிதனின் குணத்துக்கு எற்ப ருசி எவ்வாறு வேறுபடும் என்று சொல்லி இருக்கிறார்...

வாழ்க்கையில் தன் குறிக்கோள்/திசை பயணப்படப் போகும் பாதையை தெளிவாக உணர்ந்தவன் சாத்வீகன்...

அதனால்... சாத்வீகனுக்கான ருசியை பற்றி பகவான் வர்ணிக்கும்போது,  அவன் உணவு விளைவிக்கும் பலன் பற்றி கூறுகிறார். சாத்வீகன் ஆயுள், ஆரோக்யம் வளர்க்கும் உணவில் ருசி கொள்வான்...

மிதமான ருசி.. அதை உண்ட பிறகு உடலுக்கு கேடு எதுவும் இல்லாமல் ஒரு வகையான சுகம் தரும் உணவு சாத்வீகம்.

ராஜசன்... பரபரப்பு படபடப்பில் இருப்பதால், (சாத்வீகன் போல உணவின் பலன் பற்றிய சிந்தனை இல்லாமல்) உணவின் ருசியை மட்டுமே நாடுவான்... அதனால் ராஜஸன் உணவு பற்றி பகவான் சொல்லும்போது உணவு வகைகளை பற்றி வர்ணிக்காமல், ருசி பற்றி மட்டும் குறிப்பிடுகிறார்...  காரம் புளிப்பு சூடு நிறைந்த உணவை ரஜோ குணத்தவன் நாடுவான்... இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் அந்த உணவின் விளைவுகள் பற்றியும் எச்சரிக்கிறார்.

அதிக ருசி உள்ள உணவு, நோயை, வேதனையை கொடுக்கும்...

தீவிர ருசி உள்ள தாகத்தை எரிச்சலை தூக்கத்தை ஏற்படுத்தும் உணவு ராஜசம்...

தாமச குணம் உள்ளவன் உணவின் ருசி விளைவு ஆகிய 2 பற்றியும் சிந்திப்பது இல்லை... விவேகத்தை விலக்கி மூட நிலையில்  ருசியற்ற/ருசி கெட்ட உணவை நாடுகிறான். இந்த உணவு சோம்பல் மயக்கத்தை தோற்றுவிக்கும்...

இதை என் வழியில் சினிமா/வடிவேலு பாணியில் யோசித்தேன்...

நெல்லிசோறு - சத்வீகம்

நெல்லிச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் - ராஜசம்

நெல்லிச்சோறு - நெய் மணக்கும் கத்திரிக்காய்- நேற்று வச்ச மீன் குழம்பு - தாமசம்

(முள்ளும் மலரும் திரைப்பட பாடல்)

இன்று சுட்ட இட்லி சாத்வீகம்

இட்லி-சட்டினி ராஜசம்

இன்னக்கி சுட்ட இட்டிலி நேற்று வச்ச மீன் குழம்பு தாமசம்

(கந்தா கடம்பா கதிர் வேலா திரைப்பட வடிவேலு வசனம்)

நல்ல பழ ரசம் (இனிப்பு/ஐஸ் சேர்க்காத) ஸத்வம்

சூடான காரமான சூப் ராஜசம்

ஊறவைக்கப்பட்ட புளித்த திராட்சை ரசம் தாமசம்.

மீண்டும், ஸ்ரீRGR வழியில், நாம் உண்ணும் சமைத்த உணவு இறுதி வடிவம்.  அதற்கு முந்தைய படிகளில் அது எந்த குணத்தில் இருந்தது?!

உணவு தானியம் வாங்கிய பணம் நேர்மையாக மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் சம்பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்...

தான்யம்/ காய்கறி வகைகள் இயற்கையை சுரண்டாமல், இயற்கைக்கு ஊறுவிளைவிக்காமல் மருந்து ரசாயனம் கலக்காமால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படாமல் விளைந்து இருக்கவேண்டும்...

சமைபவர் பரிமாறுபவர் மன நிலை...

சமைக்கும் இடத் தூய்மை/சுகாதாரம்...

உண்ணும் போது உண்பவர் மனம்/  இறை தியானத்தில் இடம் தூய்மை இவற்றை பொறுத்தே உணவின் ஸத்வ ரஜோ தாமச குணம் நிர்ணயிக்கப்படும்.

என் வழியில்...

வீட்டுத் தொழுவத்து பசும் பால் சாத்வீகம்

பன்னையில் வாங்கும் எருமை பால் ராஜசம்

உணவு விடுதியில் அதை திரித்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டி (பன்னீர்)  தாமசம்

கொல்லைப்புரத்து காய்கறி / ஸத்வம்
உரம் வைத்து பயிரிட்ட காய்கறி/ ராஜசம்
பூச்சிக் கொல்லி மருந்து வைத்து உருவாக்கிய காய்கறி தாமசம்

ஏர் உழவு விளைச்சல் / ஸத்வம்
இயந்திர உழவு விளைச்சல் / ராஜசம்
செரிவூட்டிய விதை விளைவு / தாமசம்

வீட்டில் சுகாதாரமாக தூய்மையாக அம்மா/மனைவி சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நமக்கு பரிமாற நாம் பிரசாதமாக எண்ணி பக்தியோடு சாப்பிடும் உணவு ஸத்வம்

திருமண வைபவத்தில் /விருந்துகளில் பாரிசாரகர்கள் சமைத்து பரிமாற, குறைந்த பட்சம் வாழ்த்தும் மனோ பாவத்தில் நாம் சாப்பிடும் ஆடம்பர விருந்து  ராஜசம்

Hotel (Bar) களில் சுகாதாரம் தூய்மை இல்லாத இடத்தில் தயாரிக்கப்பட்டு / கேளிக்கை விடுதியில் காசுக்காக /பக்தி இல்லாமல் பரிமாறப்படும் உணவு தாமசம்.

சைவ உணவுகள் சாத்வீகம்
அசைவ உணவுகள் உடல் பலம் தேவை கேளிக்கை கருதி ராஜசம்/தாமசம்.

உணவின் நுகர்வு,

நம் தேவை இயல்பு பயன்பாடு கருதி இருக்க வேண்டுமே தவிர,

பிறர் எண்ணம்/வற்புறுத்தல்/ நாடகத் தன்மையோடு (status) உணவு நுகர்வு கூடாது.

மருத்துவர் ஆலோசனை படி மாமிச உணவு உண்பதற்க்கும்,

status பிறர் எண்ணம், வற்புறுத்தல் கருதி அசைவம் உண்பது/தவிர்ப்பதும் வித்யாசம் இருக்கிறதே!!!

மொத்தத்தில், இறைவனை நோக்கிய நம் பயணத்தை, இலக்கை அடைவதை சாத்வீக உணவு எளிதாக்கும்...

கடைசியாக ஜாதி குறித்து ஒரு குறிப்பு... சாத்வீக குணம் ப்ராம்மண்யம்...

ஓரளவு சாத்வீக பெருமளவு ரஜோ கொஞ்சம் தாமச குணம் கலந்த உயிர் க்ஷத்திரியம்...

ரஜோ/தாமச குண கலவை வைசியம்...

தாமச குணம் ... நான்காம் வர்ணம்...

ஜாதி என்பது பிறப்பால்/வர்ணத்தால்/ நிர்ணயிக்கப்பட்டது அல்ல...

ஜாதி என்பது குணத்தால்/ உணவால் (may  be out of Idly /dosa)  தீர்மானிக்கப்படும்!

எழுதியவர் :- திரு. கிருஷ்ணமூர்த்தி சங்கரன் தம் முகநூலில்...