புதன், 29 நவம்பர், 2017

குலதெய்வங்கள்



நண்பர்களுக்கு வணக்கம். குல தெய்வம்! இங்கே நாம் பேச நினைப்பது நம் வம்சத்துக்கே நல்ல ஒரு விழிப்புணர்வை கொடுக்கும். வழிகாட்டும்.

இங்கே நாம் பேசுவது ஏதோ சம்பந்தம் இல்லாமல் வெவ்வேறு பக்கங்களில் செல்லும்... ஆனாலும் எல்லாவற்றையும் ஒரே புள்ளியில் முடிச்சு போடுவோம்.



ஊருக்குள்ளே ஒரு போலிச் சாமியார், தினமும் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தார்....

அவரையும் நம்பி ஒரு பாமரன்... அவரிடம் உபதேசம் வேண்டி, தினமும் வந்து சாமியாரை வழிபட்டு காணிக்கை செலுத்தி வந்தான்...

பாமரன் தினமும் சாமியாரிடம் உபதேசம் வேண்டினான்.... ஒரு நாள் சாமியார் ஏளனமாக, *இங்கே_அங்கே*, இதுவே உனக்கான உபதேசம் என்றார்....

பாமரன் சுற்றம் அன்னம் பானம் மறந்து தன் ஆசாரியன் சொன்ன மகா வாக்கியத்தை ஜெபிக்க....

6 மாதங்கள் கடந்து குருவிடம் வந்தான்...

குருவே மந்திரம் பலித்து விட்டது என்று சொல்ல... குரு ஏளனமாக சிரிக்க.... அருகே இருந்த பிரம்மாண்டமான பாறையை நோக்கி பாமரன் இங்கே அங்கே என்று சொல்ல....

பாறை இங்கும் அங்குமாக நகர... அடுத்த நொடி குருவை நோக்கி அங்கே இங்கே என்று சொல்ல குரு தன் ஆசனத்தில் இருந்து சீடன் அருகில் பறந்து வர....

மேலே சொன்ன சம்பவத்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.... குரு போலி.... சீடன் மாயை... மந்திரம் வெறும் வெற்றுச் சொல்... ஆனால் அப்யாசம்/ பாமரன் பக்தி சிரத்தை உறுதியானது... பலித்தது....

குலதெய்வம் விஷயத்தில் நமக்கு வேண்டியது நம்பிக்கை/ சிரத்தை / உறுதி....





குலதெய்வ வழிபாடு என்பது இன்று, குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் அழிந்து விட்டது...

தமிழ்நாட்டில் திராவிட போலிகள் நம்மை அடியோடு அழித்துவிட்டனர்...

ஜாதி வேண்டாம்.... சரி.... ஆனால் அது தமிழகத்தில் மட்டும்தானா!

ஆன்மீகம்/ தர்மம் செழிக்க ஜாதி தேவை...

புரியும் படியாக சொல்கிறேன்...

குருநானக்/ குரு கோவிந்த சிங் போன்ற மகான்களை / ஸ்தாபகர்களை பின் பற்றி வந்த சீக்கியர்கள்.... பிந்தரன்வாலே, குர்மீத் சிங் போன்றவர்களை பின் பற்ற விளைவுகளை நேரில் கண்டோம்...

குலதெய்வ வழிப்பாட்டை மறந்து தனி மனித வழிப்பாட்டில் இறங்கி இன்று கட்சி ஜாதி சங்கம் என்று ஆளுக்கு ஒரு நீதி மூலைய்க்கு ஒரு பிரிவாக நிற்கிறோம்....

மீனவர்களுக்கு கடற்கரை தேவதைகள் / மச்ச அவதாரம் குல தெய்வமாக இருந்தவரை எல்லோரும் ஒன்று... ஆனால் இன்று, ஒவ்வொரு மீனவ குப்பத்துக்கும் ஒரு தலைவன்/ ராமேஸ்வரம் மீனவன் பாம்பனுக்குள் வரக்கூடாது....

கோனார் ஜாதியினருக்கு கிருஷ்ணன் குலதெய்வமாக இருந்தவரை ஒற்றுமை இருந்தது.... சாரங்கபாணி தலைவனாகி தேசத்தை கெடுத்து விட்டான்....

குரு என்பவர் நமக்கு பாதையை காட்டுபவர்... அவரே தெய்வமல்ல... இஸ்லாம் கிரித்தவத்தில் கடவுள் ஒன்றே.... அங்கங்கே சர்ச் பாதிரி மௌல்விகள் பின் தனித் தனி group கிடையாத வரை சரி...

கத்தோலிக்க/ பெந்தாகெஸ்த் - உள்ளூர் பாதிரி தலைமையில்.... இதுதான் பிரச்சனை...

இஸ்லாத்தில் கூட இதே கதை.... சன்னி ஷியா / பிரிவினைவாத குழுக்கள்....

ஹிந்து தர்மத்தில் .... சைவ/ வைணவ சண்டை.... ஆச்சாரியர்கள் பக்கம் பிரிந்து நிற்றல்...

கோவிலுக்கு போய் ஸ்வாமியை வழி படுவதை மறந்து பூசாரியை/ கோவிலுக்கு வழி சொன்னவன் பின்னால் அணி சேர்ந்து விட்டோம்....

வ உ சி, வாழ்க்கையின் பின்னாளில் ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டார்... அவரை அணுகிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகிகள் வ உ சி தங்கள் கட்சியில் சேர்ந்துவிட்டால், அவருக்கு தமிழக நிர்வாகி பொறுப்பும் ஜீவனத்துக்கு பணமும் கிடைக்கும் என்று ஆசை காட்டினார்கள்....

வ உ சி சொன்னார்,

அய்யா, நான் சிறை சென்ற போது நூற்றுக் கணக்கான தொண்டர்கள் வழி அனுப்பினார்கள்... சிறைவாசம் / பிரிவு என்னை மக்கள் மனதில் இருந்தே துடைத்து எறிந்துவிட்டது...

நான் விடுதலை ஆன நாளில் என்னை வரவேற்க வந்தவர்கள் சுப்ரமணிய பாரதி, சுப்ரமணிய சிவா, சங்கு சுப்ரமணியம்.

மேற்படி மூவருமே ப்ரம்மணர்கள்.... அந்த ப்ரம்மணர்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஜஸ்டிஸ் கட்சியோடு இணைந்து நான் அரசியல் செய்ய/ வயிறு வளர்க்க விரும்பவில்லை...

வஉசி க்கு தேசம் தெய்வமாக குலதெய்வமாக இருந்தது.... ஜஸ்டிஸ் கட்சி தொண்டர்களை போல அவருக்கு ஒரு பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு அயோக்கியன் தலைமையில் வஉசி இணைந்து இருந்தால்?!



வடநாட்டில் / கர்நாடகாவில் கூட ஜாதி வம்ச பெயர்களோடு கூடி இருப்பதால் .... குல தெய்வ வழிபாடு, தர்மத்தின் மீது நம்பிக்கை இன்றும் நிலைத்து இருக்கிறது....

லிங்காயத்/ கவுடா/ பட்/ஹெக்டே என்று... கர்நாடகாவில்... வடக்கே, குப்தா, யாதவ், சர்மா, திரிபாதி... இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு குலதெய்வத்தின் பின்னால் ஒருங்கிணைந்து நின்றவரை பிரச்சனைகள் இல்லை....

யாதவர்கள், முலாயம்/ லாலு என்று பிரிந்த போது?!

பிரகாஷ் சிங் பாதல் / சுர்ஜீத் சிங் பாதல் சீக்கியர்களாக இருந்தவரை பிரச்சனை இல்லை... தலைவர்கள் ஆன பின்?!

திக் விஜய் சிங், ராஜ்நாத் சிங் சரண் சிங், சிவராஜ் சிங் சர்தார்ஜி க்கள் அல்ல... ஆனால் ஏதோ ஒரு வம்சம்/ குல தெய்வத்தை நம்பியவரை மனிதர்கள்... தலைவர்கள் ஆன பின்?! அரசியல் வாதிகளாக...

பூசாரிகளை/ வழிகாட்டிகளை வழிபட்டு இலக்கை மறந்தோம் என்று சொல்லி இருந்தேன்...

இது ஏதோ இந்து சந்நியாசிகள் மடாதிபதிகளை எதிர்த்து பேசும் ஒரு திரித்து விடும் செயல் என்று யோசிக்க வைக்கிறதா?!

ஆம், நான் சிருங்கேரி/ காஞ்சி மடங்களிடையே உள்ள துவேஷம் குறித்தே பேசுகிறேன்...

ஆதி சங்கரர் சொன்ன அத்வைத சித்தாந்தப் படி சாரதா/ காமாக்ஷி எல்லோரும் ஒன்றுதானே.... பரம் பொருள் ஒன்றே பலவல்ல... சத்தியம் ஒன்றே இரண்டல்ல....

ஹரி சிவன் என்ற வஸ்து இரண்டு என்பதில் என்ன பெருமை இருக்கிறது... இரண்டில் ஒன்று.... 99% 1% என்றால் கூட, முழுமை என்பது கேள்விக்குறி ஆகிவிடும்...

ஹரி சிவன் என்பது பாட பேதம்! அதே போல சாரதா/காமாக்ஷி என்பது காட்சி பேதம்...

மூலத்தை விட்டு விட்டு மடங்களை பின் பற்றி இங்கே யார் பெரியவர் என்று சண்டை இட்டுக்கொண்டு!!!

திருவண்ணாமலை....

இங்கே கிரி வல பாதையில் சேஷாத்திரி ஸ்வாமிகள்/ ரமணர்/ யோகிராம் சூரத் குமார் (கொஞ்சம் உள்ளே) என்ற 3 சாதுக்கள்/ யோகிகள் சமாதிகள் உள்ளது...

இந்த சமாதி கோவில்கள் உள்ளே வந்து போகும் மக்கள் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடு நமக்குள் இருக்கும் பேதத்தை நமக்கு நன்றாக புரிய வைக்கும்...

கிரித்தவன் அல்லது முஸ்லீம்.... ஏற்றுக்கொண்ட கொள்கை /தலைமை ரீதியாக மோதிக்கொண்டாலும் கடவுள் என்று வரும்போது ஜீஸஸ்/ அல்லா மட்டுமே!

ஹிந்து தர்மத்தில் பிரம்மம் ஒன்றே...அதுவே புரித்தலுக்காக பேதங்களோடு ஆணாகி பெண்ணாகி அலியாகி நின்றது... ஆனால் அப்படி பரம் பொருள் அல்லது பிரிந்து நின்ற பிரம்மத்தை குலதெய்வம் என்று பின் பற்றி வாழ்வதை மறந்து தனி மனிதன் பின்னால் / பூசாரிகள் பின்/ வழிகாட்டிகள் பின்னர் போக தொடங்கி விட்டோமே!



குலதெய்வமோ/ குரு வழிபாடோ / சிவா விஷ்ணுவோ... இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூக்ஷமம் ஒன்று இருக்கிறது....

இதை சுலபமாக புரிந்து கொள்ள / அத்வைதத்தை சுலபமாக புரிந்து கொள்ள.... சில சம்பவங்களை பற்றி பேசுவோம்....

உண்டென்றிரு தெய்வம் ஒன்றென்றிரு

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

யாதொரு தெய்வம் கொண்டீர் அங்கே அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவார்

சர்வம் விஷ்ணு மயம் ஜகத்

அறுவகை சமயம் வைத்தார்....

மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ....

சகலமும் ஒன்று என்று புரியும். நாம்தான் பேதம் பார்க்கிறோம் என்பது நமக்கு புரியும்.

அஷ்ட வக்கிர மகரிஷி ஒரு நாள் ஜனகன் சபைக்கு, ஜனகன் வேண்டுகோளின் பேரில் ஒரு விவாதத்துக்காக/ சபை அறிஞர்களிடம் இருந்த ஞான விசாரங்களை தீர்த்து வைக்க வந்தார்...

அவர் உடல் 8 கோணலாக இருந்ததால் அஷ்ட வக்கிரர் என்று பெயர்....

ஜனகன் சபைக்குள் கை கால் மாற்றி உடலை வித விதமாக கோணித்து அஷ்ட வக்கிரர் உள்ளே வர ஜனகன் எழுந்து ஓடி வந்து வரவேற்க, சபை பெரியவர்கள் அஷ்ட வக்கிரர் உடல் கோணல் நடையை பார்த்து ஏளனமாக சிரித்தார்கள்....

உடனே, அஷ்ட வக்கிரர் ஜனகனை ஆசீர்வதித்து விட்டு, பொறுமையாக சொன்னார்....

ஜனக மன்னனே, நான் வந்த வேலை முடிந்தது... உன்னையும் ஆசீர்வதித்தேன்.... நான் ஏதோ கற்றறிந்த சான்றோர்கள் சபையில் உரையாட எண்ணி இங்கே வந்தேன்.... இங்கே வந்த பிறகே புரிந்தது...இங்கே கூடி இருப்பவர்கள் செருப்பு தைப்பவர்கள் என்று.... இவர்கள் தோலால் ஆன என் உடலை மட்டுமே காண்கிறார்கள்.... இவர்களோடு உரையாட நான் விரும்பவில்லை என்று சொன்னார்....

மனிதன்/ தெய்வம்/ காட்சி வேறு வேறு.... ஆனால் உள்ளே இருக்கும் உயிர் / வஸ்து/ ஆத்மா ஒன்றே...

கடலை மாவு நெய் இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் கூட வேறு வேறு பெயரில் லட்டு/ மைசூர் பாகு என்று மாறுபடும்... ஆனால் அதன் சுவை தன்மை ஒன்றே.... அது போலவே குலதெய்வம்/ குரு எல்லோரும் ஒருவரே...

தன்மையை நாடிச் செல்வதை விட்டு விட்டு தனி மனிதன் பின் தேடிச் சென்று நாம் தனிமைப் பட்டுவிட்டோம்....



முன்பே சொன்னேன்.... எங்கெங்கோ சுற்றுவோம்... ஆனால் முடிச்சு போடுவோம் என்று.... இதுவரை தெய்வம் ஒன்றுதான்.... நம் குலதெய்வம் என்பது காட்சி பேதம் என்று!

இந்த தொடரில் நாம் இழந்து விட்ட பல பொக்கிஷங்களை குறித்து பேச / எழுத/ சிந்திக்க சீர் செய்ய நிறைய உள்ளது....



திரிவேணி கிரியின் இயற்ப் பெயர் நினைவில் இல்லை....

இவர், ரமண மகரிஷியிடம் முமுக்ஷு வாக இருந்தார்.... ஒருநாள், ரமணர் திரிவேணி கிரி யிடம், நீ உடனே திருக்கோவிலூர் ஞானானந்தரிடம் செல்... உனக்கு அங்குதான் தீக்ஷை கிடைக்கும் என்றார்...

திரிவேணி கிரி மிகுந்த சஞ்சலம் அடைந்து, புது குரு நாதர் எப்படி இருப்பாரோ என்று ஐயம் அடைய....

ரமணர் சொன்னார்....

அஹம் ப்ரம்மாஸ்மி என்பது மகா வாக்கியம்.... அதாவது நானே பிரம்மம்.... ஆனால் நீயோ, ரமணன் வேறு, ஞானனந்தர் வேறு என்று பேதம் பார்க்கிறாய்... இந்த நிலை நீடித்தால் ஞானம் எப்படி கை வரப்பெரும்?!

இதே போலத்தான், பிரெஞ்ச் Paul Frenden... ரமணர் மூலம் காஞ்சி பரமாச்சாரியாரிடம் சரணாகதி அடைந்தவர்...

எப்படி குருவுக்கு பேதம் இல்லையோ, அப்படியே கடவுளுக்கும் பேதம் இல்லை.... இது புரிந்தால் மட்டுமே தர்மம் தழைக்கும்....

குலதெய்வத்துக்கு இத்தனை பீடிகையா?!

ஆம், தேவைதான்...

இன்று globalisation உலகில் .... நாம் இழந்தது குலதெய்வ வழிபாடு.... குலதெய்வம் என்பது நம் மண் /ரத்தத்துடன் கலந்து....

இன்று பல குடும்பத்தினர்களுக்கு குலதெய்வம் தெரியாது/ கோத்திரம் தெரியாது குடும்ப பெயர் தெரியாது....

இந்த தொடரில் ஸ்வீகாரம் குறித்தும் பின்னால் பேசுவோம்...

கசப்பான மருந்தை தேன் கலந்து சாப்பிடுவதை போல ... சம்பவம் / கதைகள் நடுவே தத்துவத்தை தேடுவோம்....

தேடுதலை, எங்கோ ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த நிலைக்கு செல்வதே பரம பதம் செல்ல வழி...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.... ஆம், க்ஷத்ரியன் ஆயுதங்களை நம்பி ஜெயித்தால், பிராம்மணன் தர்ப்பை புல்லையே ஆயுதம் ஆக்கிக் கொண்டான்..

ஊர் விட்டு ஊர் வந்து சொந்தம்/ மண்ணின் தொடர்பை இழந்து விட்டோம்.... இனி, தேடிக்கொண்டே சொச்ச காலத்தையும் கழித்து விடாமல், புதியதோர் விதி செய்வோம்....

வம்ச வழி பட்டியலை இனியாவது தயாரிப்போம்.... அந்த பட்டியலில் கோத்திரம்/ குடும்ப - வீட்டுப் பெயர்/ குலதெய்வம் போன்ற குறிப்புகளை நம் அடுத்த தலை முறைக்கு/ சந்ததிகளுக்கு விட்டுச்சென்ற புண்ணியம் செய்வோம்....

ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு என்ற தேடுதல் முலம் நம் ரத்தம் - சொந்தம் -மண் வாசனை பெறுவோம் / புதுப்பிப்போம்.



குல தெய்வம் என்பது கிராம தேவதைகள், வம்ச பெரியோர்கள், எல்லை/ காவல் தெய்வங்களே.

முன் காலங்களில் அரசர்கள் அவரவர்களுக்கு என்று சிவன் /விஷ்ணு கோவில்களை அமைத்து குலதெய்வ ஆராதனை என்று வழிபாடு நடத்தினர்...

குலதெய்வ வழிபாடு என்பது நான் அறிந்தவரை சமூக நல்லிணக்கம்....

மேல் மலையனூர்... இங்கே பூசாரிகள்!?!?!

1000 கணக்கான உயர் ஜாதி மக்களின் குலதெய்வம் மேல் மலையனூர் அம்மன்....

என் சகலை குலதெய்வம், ரேணுகா தேவி, படவேடு....

ஜமதக்கினி - ரேணுகா - பரசுராமர் கதை... தேடிப் பிடித்து படித்தால் தெரியும்.... ரேணுகாதேவி படவேடு அம்மன் யார் என்று....

(நீங்கள் தேடிப் படிக்க வேண்டும் என்பதறகாகவே இங்கே கதையை தவிர்கிறேன்)

சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன்.... விட்டல் தியாகராஜன்.... பீரோ of இந்தியன் standard ப்ரமணன்... குலதெய்வம் உத்திரங்குடி அய்யனார்....

கிடா வெட்டி சாராயம் படைப்பு உண்டு.... நண்பர் காசு கொடுத்துவிட்டு வழிபாடு நடத்தி விட்டு விலகி வந்துவிடுவார்...

கிடா வெட்டு/ சாராயம் /சுருட்டு என்பது எல்லாம் பின் நாட்களில் பிழைப்பு ஆதாயம் தேடி படித்தவன் பாட்டை கெடுத்து எழுதியவன் ஏட்டை கெடுத்து வந்ததே..

ஒன்று நிச்சியம்....

குலதெய்வம் என்பது சாதாரண மனிதர்களுக்கு கிராம/எல்லை/ வம்ச பெரியவர்கள் மட்டுமே....

தோரண கணபதி....

சிருங்கேரி சாரதா பீட கருவறை நுழைவு வாயில் கணபதி நெல்லை பகுதியில் பல குடும்பங்களுக்கு குலதெய்வம்...

இல்லை என்று மறுக்க யாராவது உண்டா?



கிராமங்களில் கூட்டமாக வசித்த காலத்தில் குலதெய்வ பிரச்சனை இல்லை...

நகரங்களை நோக்கி மனிதன் நகர நகர உலகம் விரிய மனம் குறுகியது.

ஜானவாசம் / மாப்பிள்ளை அழைப்பு... எதற்காக?

லக்ன பத்திரிக்கை என்று பெண் பார்க்கும் சடங்கு முடிந்த பின்.... நடக்கும் நிச்சயதார்த்தம், ஒரு சம்பிரதாயம்.... ஆனால் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து அன்று இரவு நடக்கும் நிச்சயதார்த்த சடங்கில் பத்திரிக்கை படித்து நடக்கும்... அதுவே இருதியானானது....

மாப்பிள்ளை அழைப்பு என்பது, மாப்பிள்ளை குறித்த ஒரு கருத்து கேட்பு!

அக்கம் பக்கம் அண்டை ஊர்களில் மாப்பிள்ளை ஏதாவது தப்பு தண்டா செய்து இருந்தாலும், ஜானவாசத்தின் போது மாப்பிள்ளை யின் மீது புகார் சொன்னால் கூட கல்யாணத்தை நிறுத்தி விடலாம்....

ஆனால், இன்று!

மாப்பிள்ளை எங்கோ தூர தேசம்.... மக்கள் தொகை பெருக்கம்... அதனால், மாப்பிள்ளை அழைப்பே தேவை இல்லாத செலவீன சடங்கு...

அதற்கு பதிலாக, இப்பேது முதல் நாள் மாலை reception.... நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது...

Reception இல் பெரிய போட்டோ session நடக்கும். அன்று இரவு மாப்பிள்ளை அல்லது பெண் ஓடி போய்விட்டால்?!

தேவை இல்லாத சடங்குகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நாம் குறைத்துக் கொண்டு, குலதெய்வ வழிபாடு அது குறித்த ஆராய்ச்சி என செலவு செய்யலாமே...

நகர மயமாகி நரக மயமாகி குலதெய்வத்தை மறந்து விட்டோம்...

வேர்களை/ உறவுகளை பிறந்த மண்ணை இழந்துவிட்டோம்...

Nursery யில் செடி வாங்கி வீட்டில் வைப்போம்....அந்த செடியோடு கீழே கொஞ்சம் பிறந்த மண் எதற்காக கட்டி அனுப்புகிறார்கள்?!

குலம் ஆசாரம் தெய்வம் விட்டுப் போனதற்கு முக்கிய காரணம் ஸ்வீகாரம்.... குறிப்பாக, கிறித்தவ (பிரிட்டிஷ்) ஆட்சியில் வாரிசு பிரச்சனையில் ஜான்சி ராணியே அவஸ்தை பட்டாளே.... (வரலாறு படிப்போம்)



சுவீகாரம் என்பது வாரிசு வேண்டி உறவினர் குழந்தைகளை தத்து எடுப்பது....

சுவீகாரம் என்பது அக்னி பூர்வ சடங்காக நடந்தவரை தோஷம் இல்லாமல் இருந்தது....

வெள்ளையர் ஆட்சியில், வாரிசு இல்லாத சொத்துக்கள் அரசுடைமை ஆகும் என்று சட்டம் வர,

அக்னி / மந்திர பூர்வ சடங்கு காகிதமாக மாறி ... உயில் நடைமுறைக்கு வந்தது...

சுவீகாரம், எடுப்பது பாரம்பரியமாக ஒரே கோத்திரத்தில் மட்டும் நடக்கும்.... அதுவும் மந்திர பூர்வமாக / குலதெய்வ சாட்சியாக!

பின் நாட்களில் அரசு கெடுபிடி காரணமாக சுவீகாரம் என்பது rather became emotional...சொத்துக்காக / குடும்ப உறவுகள் அழுத்தம் கருதி and not not traditional.

பேப்பரில் எழுதிவிட்டால் போதுமா?

பண்டைய நாட்களில் கோத்திரம் விட்டு கோத்திரம் சுவீகாரம் எடுத்துக்கொண்டால் கூட, அக்னி பூர்வ சடங்கின் மூலம் ஒரு ரத்த சுத்தீகரிப்பு நடந்தது.... சுவீகார சடங்கு மந்திரங்களை இந்த திசையில் ஆராய வேண்டும்.... எனக்கு போதுமான ஞானம் இந்த விஷயத்தில் இல்லை.

பின் நாட்களில் கோத்திரம் விட்டு சுவீகரித்து, குலதெய்வ சாட்சி இல்லாமல் காகித சாட்சியால் ஏற்படும் சிக்கல் ஒன்றை பார்ப்போம்...

அதற்கு முன்.... கடந்த 2016 ஜூன் மாதம் எனது ஷட்டகரின் தாயார் இறந்து போனார்... அப்போது என் மைத்துனிக்கு பெண் வீட்டு சீர் நானே வைத்தேன்.... அப்போது வீட்டின் பெயர் சொல்லி ஓதி விட சொன்ன போது, அங்கே இருந்த புரோகிதர்.... வீட்டின் பெயரை கேட்ட உடனேயே கோத்திரம்/ குல தெய்வம் போன்ற விஷயங்களை சொன்னார்....

ஆனால், என் விஷயத்தில் அது பொருந்தவில்லை.... காரணம், என் தந்தை சுவீகாரம் எடுக்கப்பட்டவர்.... என் பாட்டி கணவனை இழந்த பின் தன் முனைப்பில்! (காகிதத்தில் - வளர்ந்து பெரியவர் ஆன பின்)

ADDED to... என் தகப்பனாரின் நேரடி ரத்தத் தந்தையும் சுவீகாரம் வந்தவர்...



குலதெய்வம் என்று துவங்கி, கோத்திரம் - ஜானவாசம் - சமூக நல்லிணக்கம் - சுவீகாரம் என்று பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.....



இனி,

கோத்திரம் விட்டு கோத்திரம் ஸ்வீகரிப்பதால் குலதெய்வம் மாறியது கூட பிரச்சனை அல்ல.... ஆனால் அக்னி மந்திர பூர்வ சடங்கு அழிந்து போனதே பிரச்சனை...

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது கிடையாது...

ஆத்ரேய கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் பாரத்வாஜ கோத்திரத்தில் இருந்து சுவீகாரம் பெறுகிறார்....

இப்போது, சுவீகாரம் வந்தவர் ஆத்ரேய கோத்திரமாக கருதப்படுவார்....

அடுத்த தலைமுறையில் இவர் வீட்டில் திருமணங்கள் பாரத்வாஜ கோத்திரத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு.... இது சாஸ்திரப்படி தவறுதானே....

திருமண சடங்குகள் நடக்கும் போது பெண்ணின் பிரவரம் சொல்லி கோத்திரம் மாற்றுவார்களே அது போல, அக்னி குலதெய்வம் சாட்சியாக மந்திர பூர்வமாக சிறு குழந்தையாக இருக்கும்போதே சுவீகாரம் எடுக்கப்பட வேண்டும்... அது மட்டுமே உத்தமம்.... வளர்ந்து பின் குடும்ப அழுத்தம்/ சொத்துக்காக தத்து எடுப்பது கேடுதான்...

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.... வளர்ந்த பின் ஸ்வீகரிப்பது குல ஆச்சாரங்களை காப்பாற்றாது....

சரி, எது எப்படியோ! என் குலதெய்வம் எது என்று தெரியவில்லை... நான் என்ன செய்வது?!



பிறந்த மண்ணை விட்டு வேறிடம் சென்றவர்கள்.... முன்னோர்களை விட்டு விலகி போனவர்கள், கோத்திரம் மாறி சுவீகாரம் சென்றவர்கள் என இப்போது பெரும்பாலான குடும்பங்களுக்கு குல தெய்வம் எது என்றே தெரியவில்லை....

ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கு கிராம தேவதைகள் அய்யனார் வம்ச பெரியோர்களே குல தெய்வமாக இருந்து வந்துள்ளது...

எனவே, அவரவர் பூர்வீக கிராம தேவதைகள்/ கிராமத்து சாமிகள் தான் குலதெய்வமாக ஏற்கப்பட்டதாக புரிகிறது....

குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு...

Globalisation இல் மண்ணை விட்டு விலகி வந்து விட்டோம்...

வீட்டில் பெரியவர்களுக்கும் இதே கதி... குலதெய்வம் தெரியவில்லை...

இனி ஒரே வழி, ஜோதிடம்!



நல்ல திறமையான ஜோதிடரை அணுகி நம் ஜாதகம் கொடுத்து - பிரசன்னம் மூலமாக குல தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் வழி.

அதற்காக, ஒவ்வொரு ஜோதிடராக மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டே சென்றால் அதை விட கேலிக் கூத்து எதுவும் கிடையாது...

நம்பிக்கை தான் முக்கியம்....

அப்படி கண்டு பிடித்த குலதெய்வத்துக்கான ஆராதனையை இனி வரும் காலங்களில் விடாமல் செய்து வருவதும் மிகவும் அவசியம்.

வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் குலதெய்வ ஆராதனை இடம் பெறவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் குலதெய்வ உபாசனை செய்ய வேண்டும்.

நம்முடைய குலதெய்வத்தை தொலைத்து விட்டு வேறு தெய்வத்தை நாடி இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கூடாது என்பதற்காகவே முந்தைய பதிவுகளில் அத்வைதம் குறித்தும் சொல்லி இருக்கிறேன்....

கடவுள் என்பவர் அனுக்கிரகம் மட்டுமே செய்வார்... ஒரு போதும் நம்மை தண்டிக்கப் போவதில்லை...

அப்படி, குலதெய்வம் அறிய வீட்டில் இருக்கும் மூத்த ஆண் வாரிசு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்வது உத்தமம்.

அல்லது, யார் பிரசன்னம் பார்கிறாரோ அவர் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தும் அறியலாம்...

குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு/ கிராம - எல்லை தெய்வங்கள் என்று சொல்லி இருந்தேன்....

நினைவு இருக்கிறதா? இன்றும் கூட கிராமங்களில் காப்பு கட்டுதல் என்று சொல்லுவார்கள்..... ஊருக்குள் வந்தவர்கள் திருவிழா முடியும் வரை ஊரைவிட்டு போகக்கூடாது... என்று நிறைய கட்டுப்பாடுகள் உண்டு....

அதனால், தந்தை அல்லது பாட்டனாரின் பூர்வீக கிராமம் நமக்கு தெரிந்தால் அதையும் வெளிப்படையாக ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெற வேண்டும்...

ஜோதிடருக்கு பணம் கொடுக்கிறோம், அதனால் அவரே சொல்லட்டும், என்று அதிகார போதையோடு ஜோதிடரை அணுக வேண்டாம். நமக்கு தெரிந்த/ நம் பக்கத்து தகவல்களை / நம் சந்தேகங்களை ஒளிமறைவு இல்லாமல் ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெறுவோம்.

அதற்காக ஜோதிடர் மாற்றி ஜோதிடர் என்று அதீத ஆர்வக் கோளாறு காரணமாக தேடிக்கொண்டே திரிவது அபத்தம்!

நம்பிக்கை என்பது பலம். தேடிக்கொண்டே இருப்பது பலவீனம்!

இனி, இந்த தொடரை படிக்கும்போது நமக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து பேசுவோம்.

எல்லாம், சுபமாக நிறைவு பெறுவோம்!


எழுதியவர் :- திரு சங்கரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்.

வியாழன், 9 நவம்பர், 2017

கண்ணனின் கோபம்....

கோகுலத்தில் ஒரு நாள் வாசல் நிலைப்படியில் கண்ணன் உட்கார்ந்து இருந்தான்...

நரசிம்மன் இருக்கை அது... ஆகவே கோபமாகத்தான் இருந்தான்.... ஆனால் யசோதைக்கு என்ன தெரியும்?!

கிருஷ்ணா சாப்பிட வாடா...

கண்ணா, பாடுத்தாதேடி என் செல்லம் சாப்பிட வாடி....

உனக்கு பிடிக்கும் என்று அவல், வெல்லம், வெண்ணெய்.... எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.... வாடா....

எதற்குமே பதில் இல்லை...

கண்ணன், உம் .... என்று கோபமாகவே... இருக்க....

யசோதை எழுந்து வந்தாள்... செல்லக் கண்ணா... ஏண்டா கோபம் உனக்கு....

கன்னத்தில் கை வைத்த யசோதை யிடம் இருந்து முகத்தை திருபிக் கொண்டான் ஸ்ரீ கிருஷ்ணன்...

என்னடா கோபம் உனக்கு?

நீ, என் காதை பிடித்து நேற்று திருகினே... எனக்கு இன்னமும் அது வலிக்கிறது....

அதனால் உன் மேலே கோபம் .... கண்ணன் பவள வாய் திறந்து மழலை பிரவாகமாக....

யசோதா சொன்னாள்....

அட அசடு....

ஆதி மூலமே என்று எங்கிருந்தோ யானை கூப்பிட்டால் உன் காதில் விழுகிறது...

தொழுவத்தில் கட்டி இருக்கும் மாடு கத்தினால் உன் காதில் விழறது....

கோபிகைகள் அவரவர் வீட்டில் பால் கறக்கும் சப்தம், தயிர் கடைந்து வெண்ணெய் திரட்டும் சப்தம் உன் காதில் விழுகிறது...

க்ருத யுகத்தில் நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன் சுட்டிக் காட்டி சொன்ன தூண் அடையாளம் துவாபர யுகத்தில் உன் காதில் கேட்கிறது....

ஆனால், நான் சாப்பிட வா என்று கூப்பிட்டால், வெண்ணெய் திருட போகாதே என்று சொல்வது மட்டும் உன் காதில் விழுவதே இல்லையே.... அதனால் உன் காதில் இருக்கும் குண்டலத்தில் ஏதோ குறை இருக்கிறதா அல்லது காதுக்கு உள்ளே அழுக்கு ஏதாவது இருக்கா என்று திருகி உள்ளே கூர்ந்து பார்த்த போது நீ திமிறி ஓடிவிட பார்த்தாய்.... அதனால் கொஞ்சம் கெட்டியாக அழுத்தி பிடிச்சுட்டேன்டா குழந்தாய் என்று யசோதை சொல்ல...

கண்ணன் வெண்ணெய் கிண்ணத்தை யசோதை கையில் எடுத்துக் கொடுத்து ஊட்டி விடு அம்மா என்றான் குழந்தையாக....

எவர்கிங் கற்பனை

எழுதியவர் :- திரு எவர்கிங் ஏகாம்பரம் (சங்கரன் கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் தமது முகநூல் பக்கத்தில்

துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம்

*துஷ்ட நிக்ரஹம்*
*சிஷ்ட பரிபாலனம்*

துஷ்ட நிக்ரஹம் என்பது சமூகத்துக்கு, சூழலுக்கு கேடு விளைவிப்பவர்களை அழிப்பது...

சிஷ்ட பரிபாலனம் என்பது தர்ம நெறியோடு வாழ்பவர்களை ஊக்குவித்து நலம் சூழ வைப்பது....

இவை இரண்டையும் பகவான் ஒருவரே செய்கிறார்....

அரக்கர்களை அழித்து தேவர்களை ரக்ஷித்தல்....

அதெப்படி, ஒரே கடவுள் /பரம்பொருள் உயிர்களிடத்து பேதம் பார்க்கலாம்?!

எல்லாவற்றையும் படைத்தது இறைவன் தானே.... அவனுடைய படைப்பில் அவனே எப்படி பேதம் பார்க்கலாம்?

போலீஸ் DC இருக்கிறார்.... அவர் தன் பிள்ளையிடத்தே, மனைவியிடம் அன்பாக இருக்கிறார்... ஆனால் அவரே திருடனிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்....

அட போப்பா.... அது மனித இயல்பு/ உணர்வு என்று நீங்கள் முணுமுனுப்பது காதில் விழுகிறது...

தெய்வம் மனுஷ ரூபேனாம்.... ஒவ்வொரு உயிரிடத்தும் பரம்பொருள் நிறைந்து இருக்கிறான்.... எனவே இயல்பு ஒன்றுதான்... மனிதனின் செய்கை பேதம்.... காட்சி பேதம்.... கடவுள் மாசற்ற சோதி.... நாம் நம் வினைகள் படி...

சரி, மனித சுபாவம் வேறு வேறு குண வெளிப்பாடுகள்.... இயற்க்கை எல்லோருக்கும் பொது தானே...

சென்னை வாசிக்கு மழை கொடுமையாக... அதே மழை விவசாயிக்கு அமுதமாக....

சில இடத்தில் விவசாயிக்கு கூட மழை நாசம் உண்டு பண்ணி விடுகிறதே... இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று....

முன்பெல்லாம் மாதம் மும்மாரி மழை.... தேவைக்கு..... பத்தினிப் பெண்கள், பெய் எனப் பெய்யும் மழை... ஆனால் மனிதன் இயற்கைக்கு எதிராக அதீத ஆசையில் .... நிலத்தடி நீரை உறிஞ்சி... சுற்றுச்சூழலை எதிர்க்கத் துவங்க.... அன்னத்தை விட /பசியைவிட

தண்ணீர்/தாகம் முக்கியம்... அதனால் நிலத்தடி நீரை பெருக்க/குடிநீர் பஞ்சத்தை முதலில் போக்க - அதே கடவுள் விவசாயிகளை தண்டிக்க வேண்டியதாகி விடுகிறது...

பசி பஞ்சம் வறட்சி என்பது அவரவர் கர்ம வினை... இதை நிவாரணம், நஷ்ட ஈடு என்று அடுத்தவர் மீது சுமத்தும் போது நமக்கான தண்டனை நீடிக்கப் படுகிறது...

இதை இப்படியும் யோசிக்கலாம்.... சாலையோரம் இட்லி சுட்டு விற்கும் ஆயாவுக்கு GST இல்லை.... நிறைய சம்பாதிக்க ஆசை பட்டு மல்டி குசின் உணவு விடுதிக்கு GST உண்டு...

சிறு விவசாயிக்கு நஷ்டம் கூட சில ஆயிரங்களில்... ஆனால் புறம்போக்கு நிலங்களை வளைத்து அதிக நீர் உறிஞ்சி, அதிக ரசாயனங்களை பயன் படுத்திய பெரு விவசாயிக்கு பெரிய நஷ்டம்....

Fresh super மார்க்கெட் அருகில் கீரை விற்கும் கிழவியிடம் புதிய கீரை கட்டு ₹5.... அதே கீரை Fresh பஜாரில்... 3 நாட்கள் முன்பு வந்தது, குளிர் பெட்டியில் வைத்து கட்டு ₹30....

இது, வாடிக்கையாளரின் வரட்டு பேராசை கர்ம பலன்....

கடவுள்/இயற்க்கை விஷயத்தில் துஷ்ட நிக்ரகம் /சிஷ்ட பரிபாலனம் பார்த்து விட்டோம்.... இனி, செயற்கை யில்....

Induction stove இல் tea போட தண்ணீர் கொதிக்க வைத்து, tea தூள் அள்ளி போட்டேன்... சிறிதளவு தூள்... அடுப்பின் plate மீது, வட்டாவை சுற்றி விழுந்தது.... உடனே அந்த பகுதியில் இருந்த அந்த tea தூள் சிதறல் களை வெறும் கைகளால் சுத்தம் செய்தேன்... என் கைகளுக்கு சூடு தெரியவே இல்லை.... பாத்திர நீர் கொதிக்கிறது... வடிவேல் காமெடி ஒன்று நினைவுக்கு வருகிறது... மின் கம்பத்தில் தொங்கும் தன் காதலியின் உள்ளாடையை எடுக்க மின் கம்பத்தில் ஏற.... நண்பர் ஒருவர் எச்சரிப்பார்.... வடிவேலு சொல்லும் பதில்.... போடா.... இவனே.... இம்புத்தூண்டு குருவி மின் கம்பியில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடிட்டு போகுது.... எனக்கு தெரியாதா என்று....

மனிதன் நம்பும் வரை பிரச்சனை இல்லை... அதே hot plate stove மீது தன் கையில் இருக்கும் tester ஐ வைத்து ஆராயும் போது....

குனோ பேதம் எல்லா தரப்புக்கும் பொது... மனிதன் படைத்த induction stove பேதம் பார்க்கும்போது, கடவுள்?!

எழுதியவர்:- திரு sankaran Krishna Murthy (எவர்கிங் ஏகாம்பரம்) அவர்கள் தன் முகநூல் பக்கத்தில்